1912-08-02 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக 38 வருடங்கள் பணியாற்றிய இவர் கரவெட்டியில் மிகச் சிறந்த நாடகக் கலைஞராகத் திகழ்ந்தவர். சிறுவயதினில் தேவரையாளி வித்தியாசாலையில் பேரறிஞர் வி.க.கல்யாணசுந்தரமுதலியாரின் முன்னிலையில் உருத்திராட்சமணி பூண்டு தேவாரங்கள் பாடியதால் ஈழத்து ஞானசம்பந்தன் என்ற பட்டத்தினையும் கரவெட்டி சைவநெறிக்கழகத்தினரால் எடுக்கப்பட்ட விழாவில் கலையரசு சொர்ணலிங்கமவர்களால் கலாவிநோதன்என்ற பட்டத்தினையும் வதிரி பஞ் குழுவினர் எடுத்த நாடக விழாவில் சகலகலா வல்லவன் என்ற பட்டத்தினையும் பெற்ற இவர் இசைக் கருவிகளை பழக்குவதிலும் இசையைப் பயிற்றுவிப்பதிலும் ஈடுபாட்டுடன் திகழ்ந்த போதிலும் நாடகக் கலையின்மீதிருந்த அதீத ஈடுபாடுகாரணமாக பலநாடகங்களை நெறிப்படுத்தியது மட்டுமல்லாமல் கரவெட்டி நாடகக் கலைஞர் என்று குறிப்பிடுமளவிற்கு பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.