அன்பும் பண்பும்
நிறைந்த தமிழ் நெஞ்சங்களுக்கு
அன்பு வணக்கம் !

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம்வளர்ந்து சிறந்ததும் இந்நாடே …”
யாழ்ப்பாணம்! இது தமிழர்களின் அடையாள இருப்பினை வெளிக்காட்டும் ஒரு பாரம்பரியமான பிரதேசம் ஆகும். இலங்கைத்தீவில் தமிழர்களுடைய அடையாளங்களும் பண்பாட்டு விழுமியங்களும் பெருமளவில் பேணிப்பாதுகாக்கும் பிரதேசங்களில் யாழ்ப்பாணத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தொல்லியலிலும் அடையாள இருப்புகளை உறுதி செய்வதிலும் ஒரு பாரம்பரியம்மிக்க பிரதேசமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் பெருமைகளை அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு கையளிப் பதன் ஊடாகவே ஒரு மரபுரிமைச் சொத்து பாதுகாக்கப்படும். “சாகில் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த பண்டிதர் சச்சிதானந்தம் போன்ற பல்வேறு புலவர்கள் தம் கால்பட நடந்த மண் இது. வரலாற்றுக் காலம் தொட்டு யாழ்ப்பாணத்திற்கென்றொரு தனித்துவம் இருந்திருக்கிறது. தமிழர்களுடைய தொன்மையான ஆதிக்குடிகளின் மரபுவழிப்பட்ட வழித்தோன்றல்களால் இன்றும் யாழ்ப்பாணம் தனது பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இத்தகைய யாழ்ப்பாணத்தினுடைய பெருமைகளையும் பாரம்பரியங்களையும் வருகின்ற தலைமுறை அறிந்து கொள்வதற்கும், நேரிடையாக பார்த்துக் கொள்வதற்குமான ஒரு ஏற்பாடே யாழ்ப்பாண வாழ்வும் வளமும் சார்ந்த நூற்றாண்டுப் புலமைகளின் தேடல்களை அடுத்த…….. Read More
மார்க்கண்டு அருள்சந்திரன்,எம்,ஏ.
இயக்குநர்,
யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம்.
அறிவிப்பு பலகை
இணைய வழி அரும்காட்சிகயத்திற்கான பராமரிப்புச் செலவு அன்பளிப்பு யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற இணையவழி அரும்காட்சியகத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதற்காக அதன் பராமரிப்பு ஆள்களப்பெயர் (Domain Name) மற்றும் வருடாந்த வாடகை, ஆகிய செலவினங்களுக்கான (ரூபா 25,000.00) இருபத்தையாயிரம் ரூபாவினை கலைஞர்களின் சார்பில் பொறுப்பேற்று வழங்கிய கலைஞர், தொல்புரம் கலாலயம் நாடக மன்றத்தின் தலைவர் யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடத்தின் மதியுரைஞர் மூதவை உறுப்பினருமான திருவாளர் செல்லையா உதயச்சந்திரன் அவர்களுக்கு யாழ்ப்பாணப்பெட்டகம்- நிழலுருக் கலைக்கூடத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அவர் கலையுலகில் பிரகாசிக்க வாழ்த்துகின்றோம்.
பிள்ளையாராலயம் அருள்மிகு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் கோயில் கோண்டாவில் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் கோயில் ஆசிமடம் கோண்டாவில் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயம் நாயன்மார்கட்டு அருள்மிகு ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையாராலயம்,நீர்வேலி அருள்மிகு ஸ்ரீ அகாயக்குளம் பிள்ளையார் கோயில் , அராலி தெற்கு அருள்மிகு ஸ்ரீ அழகொல்லை விநாயகர் ஆலயம் அளவெட்டி அருள்மிகு ஸ்ரீ ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயம் – இளவாலை அருள்மிகு ஸ்ரீ இத்தியடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம் – சங்கத்தானை,சாவகச்சேரி அருள்மிகு ஸ்ரீ இறுப்பிடடி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம் – 6ஆம் வட்டாரம்,புங்குடுதீவு அருள்மிகு ஸ்ரீ இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் வேலணை, அருள்மிகு ஸ்ரீ உப்புமடம் பிள்ளையார் ஆலயம் அருள்மிகு ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயகர் ஆலயம் அருள்மிகு ஸ்ரீ ஒக்களைப்பிள்ளையார் ஆலயம் – கைதடி அருள்மிகு ஸ்ரீ கருணாகரப்பிள்ளையார் ஆலயம் – உரும்பிராய் அருள்மிகு ஸ்ரீ காசிப்பிள்ளையார் ஆலயம்…
யாழ்ப்பாணத்து ஆளுமையாளர்கள் யாழ்ப்பாணத்து ஆளுமைகள் தொடர்பில் எம்மால் பாதுகாக்கப்பட்டவர்களது பெயர்களை இங்கே பதிவிட்டுள்ளோம். இவற்றில் பலர் தவறிவிடப்பட்டிருக்கலாம். அவ்வாறான ஆளுமைகள் தொடர்பாக தமிழ் உறவுகளாகிய நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்வதற்கு என்னும் பகுதியினூடாக தகவல்களை அனுப்பி வைக்கமுடியும். அல்லது எமது மின்னஞ்சல் மூலம் தரவுகளையும் புகைப்படங் களையும் அனுப்பி வைக்கமுடியும். உங்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளை யும் ஒத்துழைப்பினையும் வரவேற்கின்றோம். பொதுச்செயலாளர். அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை அங்கையன் கைலாசநாதன் அசீஸ். ஏ. எம். ஏ. அண்டர்சன், ஜேக்கப் அண்ணாசாமி ஆசிரியர், எம்.பி அண்ணாமலைப் பரியாரியார். அந்தோனி அண்ணாவியார் (கலைக்குரிசில்) அந்தோனி, சின்னத்தம்பி அந்தோனிப்பிள்ளை, கிறகோரி (துரை) அந்தோனிப்பிள்ளை, மனுவல் அப்புத்துரை ஸ்ரீரங்கம் அப்புலிங்கம்பிள்ளை. எஸ்.எஸ். அம்பலவாணர் சுவாமிகள் அம்பலவாணர் சுவாமிகள் அம்பலவாணர் நாவலர் சுவாமிகள் அம்பலவாணர். டி.ஜே (பேரருட்கலாநிதி) அம்பலவாணர். வீ. அம்பிகைபாகன் , ச அமிர்தலிங்கம், அப்பாப்பிள்ளை அரவிந்தன்,கி.பி. அரியரட்ணம், ,ராஜ அருட்கலாநிதி நீக்கிலாப்பிள்ளை மரியசேவியர் அடிகள் …