1891-06-10 ஆம் நாள் காங்கேசன்துறை -மயிலிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளரா கப் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும், கல்வியியலாளரும், கலாரசிகருமாவார். இவரால் எழுதப்பெற்ற கூட்டுறவு இயக்கம், பிரித்தானிய சக்கராதிபத்தியத்தின் சரித்திரச் சுருக்கம் ஆகிய நூல்கள் இவரது அறிவின் ஆழத்தை உணர்த்தி நிற்கின்றமை கண்கூடு. 1969-05-15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.