Sunday, February 16

கிருஸ்ணபிள்ளை, முருகர்

0

தேவமகால், வதிரி, நெல்லியடி வடக்கு என்னும் இடத்தில் 02.12.1908 ஆம் நாள் பிறந்தவர். இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த திருவாளர் சின்னையா சாயிபாபா அவர்கள் குருவாகக் கிடைக்கப்பெற்றார். அவரிடமிருந்து ஆர்மோனியம், நாடகம், கர்நாடக இசை போன்றவற்றைக் கற்றார். இவரது கலையார்வத்தால் 1939 ஆம் ஆண்டு “கிரு~;ணகானசபா” என்ற சபையை நிறுவிப் பல கலைஞர்களையும் இணைத்து கலைப்பணி ஆரம்பித்தார். காத்தவராஜன், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, பிரகலாதன் போன்ற நாடகங்கள் இவருக்குப் புகழைப் பெற்றுக்கொடுத்தன. இவர் எழுதிய “தீண்டாமைக்கு ஒரு சாவுமணி” என்ற நாடகம் இவரை மேன்மேலும் பிரகாசப்படுத்தியது எனலாம். இவர் தவில், ஆர்மோனியம், கெஞ்சிரா, மிருதங்கம், எக்கோடியன் போன்ற பல இசைக் கருவிகளை வாசிக்க வல்லவர் என்பதுடன் , பல மாணவர்களையும் இத்துறையில் பயிற்றுவித்துள்ளார். 1974 ஆம் ஆண்டு ஊர் மக்களால் இவரது கலைச் சேவையைப் பாராட்டி மாபெரும் விழா எடுக்கப்பட்டது. இதில் இவரிற்கு பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கியதுடன். “பல்கலைப் பண்டிதர்” என்ற பட்டமும் அக்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்த திரு.தம்பிமுத்து அவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன் 1977 இல் தினகரன் பத்திரிகை யாழ். வீரசிங்க மண்டபத்தில் “அண்ணாவிமார் மாநாடு” ஒன்றை நடத்தியது. அதில் இவரிற்கு கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் “கலாமேதை” என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். 1983.13.12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!