“பாரதிபவனம்” கவிஞர் செல்லையா வீதி , அல்வாய் எனுமிடத்தில் 1922.6.11 ஆம் நாள் பிறந்தார். இவர் அல்வாயூர் கவிஞர் அண்ணாவியத்தில் உருவாக்கப்பட்ட பல நாடகங்களில் நடித்து வந்தார். பிரபலமான “பூதத்தம்பி” நாடகத்தில் சின்னலாந்தேசுவாக நடித்து முத்திரை பதித்தவர் பின்பு ஆர்மோனியம் பயின்று ஏராளமான நாடகங்களுக்குப் பக்கவாத்தியம் செய்ததுடன், பலரை ஆர்மோனியக் கலைஞராக்கினார். சோதிடர் ச. தம்பிஐயா அவர்களுடன் இணைந்து செய்யும் நாடகங்களில் பாடல்கள் சொல்லிக்கொடுத்து ஆர்மோனியமும் இசைப்பார் . காத்தவராயன் சிந்து நடைக்கூத்து, நச்சுக்கோப்பை, கல்யாணப்பரிசு, சகோதரபாசம், ஸ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, போன்ற பல நாடகங்களை அண்ணாவியம் செய்தார் . அல்வாயூர் கவிஞர் நாடக மன்றத்தின் அண்ணாவியார் இவரே. அக்காலத்தில் புகழ் பெற்ற நாடகக்கலைஞர்கள் வைரமுத்து, மார்க்கண்டு, நற்குணம் போன்றவர்கள் இவரது ஆர்மோனியத்தை விரும்பிப் பயன்படுத்தினர்.