Sunday, October 6

தம்பிஐயா, சபாபதி

0

1917.7.21 ஆம் நாள் அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, நாடகம் குறிப்பாக இசை நாடகங்களை எழுதியும் அண்ணாவியம் செய்தும் நடித்தும் வந்துள்ளார். 1935 முதல் 1987 வரை கலைத்துறையில் ஈடுபட்டுள்ளார்.இசை நாடகங்களை எழுதி அண்ணாவியம் செய்ததனால் பல கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இவர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோண மலை போன்ற பல்வேறு இடங்களிலும் நாடகங்களை நடித்தும் அண்ணாவியம் செய்து மேடை ஏற்றியும் உள்ளார். இன்றைய முன்னோடிக் கலைஞர்களான இவரது மகன் கலாநிதி கலாமணி, மா.அனந்தராஜன், த.ஐயாத்துரை, இ.சிவபாதம் போன்ற பல நடிகர்கள் இவரது கலைச்சேவையின் பிரதிபலிப்புகளே.அத்துடன் ஈழத்தின் இசை நாடக முன்னணிக் கலைஞர்கள் பலரும் இவருடன் இணைந்து நடித்தவர்களே. அன்று மேடைநாடகங்களில் போட்டி நிலவிய போது எவராலும் வெல்லப்பட முடியாத ஸ்பெஷல் நாடக நடிகராக இவர் விளங்கினார். கவிஞர் மு.செல்லையாவினால் உருவாக்கப்பட்ட மனோகர கான நாடக சபையை இறுதிக்காலம் வரை இயக்கி வந்தார். இவரது மறைவின் போதான இரங்கலுரையில் இவருக்கு “நடிகவேள்” என்னும் பட்டம் சூட்டப்பட்டது. இவருடைய கலைச்சேவையினைப் பாராட்டி “நடிகநிலா” நடிகவேள் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள் ளன. இவர் தனது வாழ்க்கையை கவிதை, நாடகம், சோதிடம் போன்ற துறைகளிலேயே கழித்தமையால் இவரது பொருளாதார நிலை செழிப்பாகக் காணப்படவில்லை. இவரது மகன் கலாநிதி கலாமணி புகழ்பெற்ற இசை நாடகக் கலைஞராவார்.1988 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுல கம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!