1885 ஆம் ஆண்டு சரவணையில் பிறந்தவர்.இவர் கவிபாடுவதில் சிறந்த வல்லமை பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் கோயில்கள் தோறும் கந்தபுராணம் படித்துப் பொருள் சொல்லு வதிலும், வழிபடு தெய்வங்கள்மீது தோத்திரங்கள், பிரபந்தங்கள் செய்வதிலும் தமது காலத்தைக் கழித்தவர்.இவரால் இயற்றப்பட்ட பிரபந்தங்களிலே சிலேடைகள், யமகங்கள் விரவியிருப்பதுண்டு. இவர் பக்திச்சுவை சொட்டப் பாடிய தெய்வத் தமிழ்ப் பிரபந்தங்கள் பலவாகும். இவரது நாவன்மைக்காக நல்லூர்ஸ்ரீ.த.கைலாசபிள்ளை அவர்களும் அவரது மருமகர் ஸ்ரீ.மு.சோமசுந்தரம் அவர்களும் இணைந்து புலவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. இவரது தெய்வத்தமிழ்ப் பிரபந்தங்கள் என்ற நூலானது இவருடைய ஆளுமைத்திறனை எடுத்துக்காட்டும் ஓர் அரிய நூலாகும் .1966-07-05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
