புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் காட்டுப்புலம் அரசடி ஸ்ரீஆதி வைரவர் ஆலயத்தின் ஆரம்பகால ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆலயம் அமைந்துள்ள காணியினை தருமசாசனம் செய்தவர்களில் ஒருவருமாவார்.குமாரவேலு தம்பையா என்ற இயற்பெயருடைய இவர் ஸ்ரீசுவாமி சதானந்தாஜி என அழைக்கப்பட்டவர். இல்லற வாழ்வில் இருந்து வாழ்வின் இறுதிக்காலங்களில் துறவற நிலைக்குச்சென்று இறைபணிக்கே தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்தவர். இவருடைய நினைவாக புங்குடுதீவு தெற்குக் கடற்கரையில் சமாதி அமைக்கப்பட்டு இன்றும் கிராம மக்களால் போற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.