Sunday, October 6

ஐசாக் தம்பையா, ஆறுமுகம் தம்பிப்பிள்ளை

0

1869-08-19 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியிலும் கற்றார். இளம் வயதிலேயே Garland of Ceylon Verses, By the Bridge ஆகிய இரண்டு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் கொழும்பு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். 1899 ஆம் ஆண்டில் சட்டவாளராக அங்கீகரிக்கப்பட்டு 1901 வரை கொழும்பிலும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றி பின்னர் 1908 ஆம் ஆண்டில் கொழும்பு உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பதவியில் அமர்ந்தார். 1904 ஆம் ஆண்டில் வுhந ஊhசளைவயைn சுநஎநைற என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். 1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் சட்டவாளர் கழகத்தில் (Gray’s Inn) உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தின் எழுத்தாளர்களின் ஒருங்கிணைந்த கழகத்தின் (Incorporated Society of Authors) உறுப்பினராகவும் சேர்ந்தார். இக்கழகத்தில் இணைந்த முதலாவது இலங்கையர் இவரே. 1913 ஆம் ஆண்டில் அங்கிருந்து மலாயா சென்று பினாங்கு மாநிலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மலாயாவில் இருந்தபோது இறையியல் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் இறையியலில் பட்டம் பெற்று திருச்சபையில் குருவானவராகப் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பி தமது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு முழுநேர இறையியலில் நாட்டம் செலுத்தினார். 1924 இல் உதவிக்குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அடுத்த இரண்டாண்டு களில் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டு சுண்டிக்குளி பரி.யோவான் திருச்சபையில் பணியில் அமர்த்தப்பட்டார். அங்கு அவர் 1938 வரை பணியாற்றினார். பின்னர் பண்டாரவளையில் முதன்மைக் குருவாகப் பணியில் அமர்த்தப்பட்டார். 1940 களின் ஆரம்பத்தில் கொழும்பு சென். செபஸ்டியன், புனித திரித்துவத் திருச்சபையில் பணியாற்றினார். கொழும்பு இறையியல் பாடசாலையில் துணை அதிபராகவும் பணியாற்றியிருந்தார். 1934 யூன் 9 அன்று யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆரம்பிக்கும் நோக்கோடு நிறுவப்பட்ட குழுவின் துணைத் தலைவராகவும் பணி செய்த இப்பெரியார் 1905-05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!