Sunday, February 9

கலைஞானகேகரி கொன்ஸ்ரன்ரைன்,வெலிச்சோர் ஜூலியஸ்

0

1942.03.13 ஆம் நாள் குருநகரில் வெலிச்சோர் ஜீலியஸ் தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தார். சமூகநலப் பணிகளிலும் கலை, கலாசார , ஆன்மீக, அறிவியல், தொழில்நுட்பப் பணிகளிலும் தன்னை முற்றுமுழுதாக ஈடுபடுத்தி செயற்பட்டவர். இளைஞர் கலைக்கழகம் ஊடாக ஊருக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இருபத்தெட்டு ஆண்டுகள் திருமறைக்கலாமன்றத்தின் பொதுச்செயலாளராக இருந்து அதன் வளர்ச்சியிலும் கவின் கலைகள் பயிலகம், சைவசித்தாந்த ஆய்வுவட்டம் போன்றவற்றில் ஆற்றிய முதன்மையான பங்கு  போற்றுதற் குரியது- மறக்கப்பட முடியாதது. குருநகர் முன்னேற்ற ஐக்கிய முன்னணி இன்றுவரை பலமாக இயங்கி வருவதற்கு முக்கிய காரணியாக அமைந்தவர்.     NEO CULTURAL COUNCIL இயக்குநராக இருந்து பல நூல்களை வெளியிட்டார். யாழ்ப்பாணம் கலாசாரப் பேரவையின் உறுப்பினராக, உபதலைவராகப் பணியாற்றினார். நாடகத்துறையில் மிகவும் நுணுக்கமான நடிப்பாற்றலைக் கொண்டிருந்த இவர் அதனை மற்றவர்களுககும் சொல்லிக் கொடுக்கும் பண்புடையவராகத் திகழ்ந்தார்.

நடித்த நாடகங்கள்.

 1950 –      திருக்குடும்ப கன்னியர் மடம் (ஆங்கிலப் பாடசாலை) ஆங்கில நாடகத்தில் பாடும் மாலுமி.

1954 – புனித யாகப்பர் பாடசாலை மண்டபம் காசில்டா நாடகத்தில் கதாநாயகி இளவரசி காசில்டா.

1960 :      ஒலிம்பிக் கழகம் வழங்கியகண் திறந்தது நாடகத்தில் டாக்டர் குமார். பாடல்.து.கொன்ஸ்ரன்ரைன்.   நெறியாள்கை. பிரகாசராசா,V.J.கொன்ஸ்ரன்ரைன்.  (பல போட்டிகளில் முதற் பரிசும், தங்கப் பதக்கமும் பெற்றுள்ளதோடு 25 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டது.).

1967 :      யாழ்.மாநகர மண்டபத்தில் சிம்லாஸ் கம்பைன்ஸ் வழங்கியஇடிந்த கோவில்நாடகத்தில் கதாநாயகன். கதை, வசனம், நெறியாள்கை, ஆடை, மேடை, ஒளியமைப்பு, பின்னணி இசை – V.J.கொன்ஸ்ரன்ரைன்.

1971 :      குருநகர் கலை அரங்கில்அரச கட்டளைநாடகத்தில் ஏரோதன். கதை, வசனம், நெறியாள்கை, ஆடை, மேடை, ஒலி, ஒளியமைப்பு – V.J.கொன்ஸ்ரன்ரைன்.

1971 –      யாழ் கோட்டை வெளியில் 300 அடி மேடையில் திருமறைக் கலாமன்றம் வழங்கிய அன்பில் மலர்ந்த அமர காவியம் நாடகத்தில் ஆளுநர் பிலாத்து.

ஆடை அமைப்பு, உதவி நெறியாள்கை .து.கொன்ஸ்ரன்ரைன், நெறியாள்கைநீ. மரியசேவியர் அடிகள்.

1972 :      குருநகர் கலை அரங்கில் செந்தமிழ் மன்றம் வழங்கியவீரமாநகர்இலக்கிய நாடகத்தில்இராவணன். கதை, வசனம், நெறியாள்கை, ஆடை, மேடை, ஒலி, ஒளி அமைப்பு.து.கொன்ஸ்ரன்ரைன்.

1972 :      யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் திருமறைக் கலாமன்றம் வழங்கிய ஒளிவிழா நாடகத்தில் ஏரோதன், 1973 – தென் இந்திய நகரமான திருச்சியில் தேவர் ஹாலில்களங்கம்நாடகத்தில் ஆளுநர் பிலாத்து. ஆடை, ஒலி அமைப்புஉதவி நெறியாள்கை.து.கொன்ஸ்ரன்ரைன், நெறியாள்கைநீ. மரியசேவியர் அடிகள்.

1974 :      அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் செந்தமிழ் மன்றம் தயாரித்து வழங்கியவீரமாநகர்இலக்கிய நாடகத்தில்இராவணன். 1993 : இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக) திருமறைக் கலாமன்றம் வழங்கியகளங்கம் நாடகத்தில் ஆளுனன் பிலாத்து.

1993: யாழ். திருமறைக் கலாமன்ற மேடையில் களங்கம் நாடகத்தில் ஆளுனன் பிலாத்து.

1994: தமிழ் விழாவில் திருமறைக் கலாமன்றம் வழங்கியகும்பகர்ணன்இலக்கிய  நாடகத்தில் இராவணன். கதை, வசனம், நெறியாள்கை.து.கொன்ஸ்ரன்ரைன்.

1994 :      அகில இலங்கை கம்பன் கழகம் நல்லூரில் நடத்திய கம்பன் விழாவில் கும்பகர்ணன இலக்கிய நாடகத்தில் இராவணன்.

1995 :      சென் பிறிஜற் கொன்வன்ற், டவர் மண்டபம், யாழ்.திருமறைக் கலாமன்ற அரங்கம் ஆகியவற்றில் திருமறைக் கலாமன்றம் வழங்கிய அன்பில் மலர்ந்த அமர காவியம் நாடகத்தில் ஆளுனன் பிலாத்து.

பணிபுரிந்த பல்வேறு அமைப்புகள்

சமயப்பணி :

திருப்பாலத்துவ சபை (தலைவர் செயலாளர்)

புனித வின்சென் டி போல் சபை

திரு இருதய சபை

புனித யாகப்பர் பங்குச்சபை

மேய்ப்புப்பணி மாநாடு 1994 (இணைப்பாளர், கலாசாரப் பிரிவு)

 சமூகப் பணி :

குருநகர் கலைக்கழகம் (தலைவர்)

குருநகர் முன்னேற்ற ஐக்கிய முன்னணி (18 கழகங்களின் இணைப்புதலைவர்)

கலைப்பணி :

திருப்பாலத்துவ சபை

ஒலிம்பிக் கழகம்

சிம்லாஸ் கம்பைன்ஸ்

செந்தமிழ் மன்றம்

திருமறைக் கலாமன்றம் (பொதுச் செயலாளர் 1971 – 1998)

நெயோ கல்சரல் கவுன்சில் (இயக்குநர்)

யாழ். பிரதேச கலாசாரப் பேரவை (கலை மேம்பாட்டுச் செயலர்)

நெறியாள்கை செய்த நாடகங்கள்

1957 சர்வாதிகாரி

1960 தேன் விருந்து

1962 கண்கள் எங்கே?

            கலைக் கோவில்

1967  இடிந்த கோவில்

1971  அரச கட்டளை

1972 வீரமாநகர்

1993 வளையாபதி

1994 கும்பகர்ணன்

1997 கூத்துப் பண் நடம்    (நாட்டிய நாடகம்)

1998 OTHELLO  (ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகம்)

1998  HAMLET (ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகம்)

2001 KING LEAR  (ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகம்) இவைதவிர பல கலை மன்றங்களின் நாடகங்களை இயக்கியதுடன் பல நாடகங்களின் நெறியாள்கையை மேற்பார்வை செய்துள்ளார்.

 வீடியோ திரைப்படங்கள் :

    திருமறைக் கலாமன்றத்தின்பலிக்களம்‘.  உதவி நெறியாள்கை .து.கொன்ஸ்ரன்ரைன்.

குருநகர் முன்னேற்ற ஐக்கிய முன்னணியின் யூதகுமாரன்  நெறியாள்கை V.J கொன்ஸ்ரன்ரைன்.

 எழுதிய நாடகங்கள் :

     சர்வாதிகாரி

     தேன் விருந்து

     கண்கள் எங்கே?

     கலைக் கோவில்

     இடிந்த கோவில்

     அரச கட்டளை

     வீரமாநகர்

     உதிர்ந்த மலர்

     சதுரங்கம்

     கும்பகர்ணன்

     சேகரின் அதிஷ்டம் (,சையும் கதையும் இலங்கை வானொலி 1960)

 இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட ஆற்றுகைகளில் சம்பந்தப்பட்டுள்ள இவர் எழுத்துரு, நடிப்பு, அரங்க அமைப்பு, ஒலிஒளி வடிவமைப்பும் இயக்கமும், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, அரங்க நிர்வாகம், முகாமைத்துவம், நெறியாள்கை ஆகிய துறைகளிலும் பங்களித்துள்ளதோடு காலாகாலமாகத் தொழில் ரீதியாகப் பேணப்பட்டு வந்த ஒப்பனை, ஆடை அமைப்பு, அரங்க அமைப்பு போன்ற தொழில் நுணுக்கங்களை இளைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து பலரை உருவாக்கம் செய்துள்ளார். 30 இற்கும் மேற்பட்ட பல்வேறு கலைமன்றங்களில் நாடகப் படைப்புகளை மேற்பார்வை செய்ததுடன் பல நாடகங்களை நெறியாள்கையும் செய்துள்ளார். திருமறைக் கலாமன்றத்தின் பிரமாண்டமான வெற்றிப் படைப்புகள் அனைத்திலும் நாடகத் தயாரிப்பு சம்பந்தமான சகல அம்சங்களிலும் இவரது பாரிய பங்களிப்பு இருந்துள்ளது. மன்றத்தின் 34 கலைப்பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளராக (கவின்கலைகள் பயிலகம் உட்பட) நிர்வகித்த அனுபவம் இவருடையது.

திருமறைக் கலாமன்றத்தின் பொதுச் செயலாளராகவும் மற்றும் பிரதி இயக்குநர், வழிநடத்துனர், முகாமையாளர், அமைப்பாளர், இணைப்பாளர், நாடக முகாமையாளர், தட்டெழுத்தாளர், கலைஞர், நாடக இயக்குனர், நாடகத் தயாரிப்பாளர், ஒலிஒளி இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், வரையிலாளர், மேடை அமைப்பாளர், நெறிப்படுத்துனர், திட்டமிடுபவர், விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மன்றத்தின் இயக்குநர் வெளிநாடு சென்ற வேளைகளில் இயக்குநராகவும் கடமையாற்றியுள்ளார். திருமறைக் கலாமன்றத்தின் இன்றைய நிலைக்கு அடித்தளமிட்டு ஆணிவேராக, அத்திவாரமாக அமைத்துத் தந்தது மட்டுமன்றி, மன்ற அங்கத்தவர்களின் எதிர் காலத்திற்காக அநுபவம்மிக்க, ஆற்றல் மிக்க, இளம் துடிப்புள்ள இளையோரை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். ஒரு வைத்தியராகி மாண்புடன் சேவை யாற்ற விரும்பிய இவர், தந்தையின் மறைவினால் தன் குடும்பத்துக்கு உதவவேண்டுமென்ற நல்லெண்ணத்தில், தனது இருபதாம் வயதில் தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக நியமனம் பெற்று உதவி செய்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வாசிப்பு, பேச்சுத் திறனுடையவராக விளங்கினார்.

இவரது மும்மொழித் திறமை திருமறைக் கலாமன்ற வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக விளங்கியதால் நாடு முழுவதும் மன்றம் பல கிளைகளை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். தமது திறமைகளை மன்ற அங்கத்தவர்கள் கற்கவேண்டுமென்பதால் எல்லோருடனும் உரையாடுவதில் மகிழ்ச்சி கண்டார். மனைவி, பிள்ளைகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் ஏனைய மன்ற அங்கத்தவர்களும் தமது குடும்பத்தினருடன் இணையத் தொடங்கினர். நல்லதொரு குடும்பம் நாட்டுக்குத் தேவை என்பதை வெளிப்படுத்த பலரின் உதவிகளையும் பெற்று, அழகிய மணி மண்டபம் உருவாக உறுதுணையாகச் செயற்பட்டார்.

 1992 இல் தேசிய கத்தோலிக்க வழிபாட்டு கலாசார ஆணைக்குழு அங்கத்தவராக செயற்பட்ட இவர், 1998 இன் புதிய நிர்வாகம் அமைக்க வழிவிட்டு, தனது இல்லத்தில்நேயோ கல்சரல் கவுன்சில்இனை உருவாக்கி, இயக்குநராகத் தனித்துச் செயலாற்றி, மக்களின் முன்னேற்றத்துக்காக பல சேவைகளைச் செய்தார். செயல்முறைக் கணிப்பொறி என்ற நூலை வெளியிடுவதில் ஆரம்பித்து பல நூல்களை வெளியீடு செய்துள்ளார். நாட்டில் அசாதாரண சூழலில் நிலவிய காலத்தில் மக்களின் தேவையறிந்து பல உதவிகளை கடிதங்கள் மூலம் நிறைவுசெய்துள்ளார். நாடக, இசை நிகழ்ச்சிகளுக்கு ஒலி, ஒளி அமைப்பாளராகவும், விசேடமாக இலங்கையிலுள்ள பிரபல்யமான நாடக அரங்குகளில் பல்வேறு ஆற்றுகைகளுக்கு ஒளி அமைப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

 அவையாவன:

யாழ்ப்பாணம்

     முன்னாள் மாநகரசபை மண்டபம்.

     யாழ். வீரசிங்கம் மண்டபம்.

     திருமறைக் கலாமன்ற திறந்தவெளி அரங்கு.

     சென் ஜோண்ஸ் கல்லூரி அரங்கு.

     புனித பத்திரிசியார் கல்லூரி மண்டபம்

     யாழ். இந்துக்கல்லூரி மண்டபம்

     குருநகர் கலை அரங்கு

     சுண்டிக்குளி மகளிர் பாடசாலை அரங்கு

     சென் ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை அரங்கு

     கைலாசபதி அரங்கு, யாழ் பல்கலைக்கழகம்

 கிளிநொச்சி

     புனித திரேசா ஆலய திறந்தவெளி அரங்கு.

 வவுனியா

 திருகோணமலை

     புனித ஜோசப் கல்லூரி அரங்கு,

     புனித ஜோசப் கல்லூரி திறந்தவெளி அரங்கு.

 ஹற்றன்

 கொழும்பு

     எல்பின்ஸ்டன் மண்டபம் மருதானை.

     டவர் மண்டபம்மருதானை.

     சென் பிறிஜற் கொள்வன்ற கொழும்பு 07.

     கதிரேசன் மண்டபம் வெள்ளவத்தை

     இராமகிருஷ்ண மண்டபம் வெள்ளவத்தை

     லயலை வென்ற்தியேட்டர்

 மகரகம

     இளைஞர் அரங்கு    (அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது)

 நேயோ கல்சரல் கவுன்சில் மூலம் வெளியீடு செய்யப்பட்ட நூல்கள்

  1. செயல்முறைக் கணிப்பொறி
  2. கணிப்பொறி 2000 (இரண்டு பதிப்புகள்)
  3. ஆசிரியத்துள் நான்
  4. களம் தந்த களங்கம்
  5. குருநகர் கலைமாட்சி
  6. Who are the Kurukulams of Jaffna (English>
  7. கடலலைகள் கொஞ்சும் நகர்
  8. சவுலன் சின்னப்பர்
  9. காதல் நெஞ்சம்
  10. குருதிக் களியல்
  11. ஆன்மீகத்தில் குருநகர் மக்கள்
  12. ஆகுதி
  13. ஆசிரியத்துள் நான்நான்கு தசாப்தங்கள்

 பெற்ற விருதுகள்

கலைஞானகேசரி

கலாபூஷணம்

ஆளுநர் விருது.

வீ.ஜே.கொன்ஸ்ரன்ரைன் நிகழ்வுகளின் பதிவுகள் 

                        வீரமணி ஐயரவர்களால் பொன்னாடை போர்த்தப்படுகின்றார்.        அருகில் வீற்றிருப்பவர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மா அவர்கள்                                                                                     திருமணஅழைப்பிதழ்                                                                                     விருதுச்சாண்றிதழ்

            கையால் எழுதிய நாடகப்பிரதி

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!