Thursday, May 2

செல்லத்துரை.சமத்தர்

0

வலிகாமம் வடக்குப் பிரதேசத்திலுள்ள சிறு கிராமமான ஒட்டகப்புலம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடையும் வரையும் பாரம்பரிய முறிவுநெரிவு வைத்தியங்காரணமாகப் பிரபல்யம் பெற்று விளங்கியது. அச்சுவேலியில் இருந்து தெல்லிப்பளை செல்லும் மார்க்கத்தில் வசாவிளானுக்கும், அச்சுவேலிக்கும் இடையில் ஒட்டகப்புலம் அமைந்துள்ளது.

சமத்தர் எனக் காரணப் பெயர் பெற்ற் பாரம்பரிய முறிவு நெரிவு வைத்தியர் சமத்தர் என்பவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சமத்தர் செல்லத்துரை. இவருக்கு மூத்தவரான சமத்தர் சூசைப்பிள்ளை தந்தையுடனேயிருந்து வைத்தியத் தொழில் ஈடுபட்டார். இவரின் மற்றொரு சகோதரன் சமத்தர் ஜேம்ஸ் என்பவர் திருகோண மலையில் ஒட்டகப்புலம் வைத்தியசாலையின் கிளை ஒன்றை ஏற்படுத்தி திருகோண மலையிலும், மூதூரிலும் உள்ள மக்களுக்குச் சேவை செய்தவர். சமத்தர் செல்லத்துரை அவர்கள்;; இந்தியா சென்று தமது வைத்தியக்கல்வி மேம்படுத்தியவர். இவர் ஒட்டகப்புல வைத்தியத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் ஒட்டகப்புலம் வைத்தியசாலையின் கிளையொன்றை நிறுவி வைத்தியத்தொழில் செய்தவர்;. இவருக்கு உதவியாக இவரது பிள்ளைகளான மரியநாயகம், அருட்பிரகாசம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். சமத்தர் செல்லத்துரையின் பெறாமகன் முறையில் ஜோசப் நவரத்தினசிங்கம் என்பவர் உரும்பிராயில் தமது பரம்பரை வைத்தியத்தை செய்து வருகிறார். இவர்களைத்தவிர ஒட்டகப்புலம் வைத்தியசாலையில் வைத்தியர் களுக்கு உதவியாளர்களாக மருந்து தயாரித்தல், மூலிகை சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்த சிலரும் இடப்பெயர்வுக்குப் பின்னர் ஒட்டகப்புலம் வைத்தியம் என்ற பெயரில் வைத்தியத்தொழிலில் ஈடுபட்டிருந்ததை அறியக் கூடியதாவுள்ளது.

இவர்கள் பற்றி கிடைத்த குறிப்புகளையே பதிவிடமுடிந்துள்ளது. இவர்களது பரம்பரையினர் அல்லது நலன் விரும்பிகள் இவர்கள் பற்றிய முழுமையான விபரங்களை சமர்ப்ப்பித்தால் பேருதவிய அமையும். தந்தையார் சமத்தர், இவரது பிள்ளைகளான சமத்தர் சூசைப்பிள்ளை சமத்தர் ஜேம்ஸ் ஆகி;யவர்களது புகைப்படங்கள் மற்றும் வரலாற்று விபரங்கள் வைத்திருப்பவர்கள் தந்துதவவும்.

நன்றி : இத்தகவல்கள் இவர்களது கட்டுரையிலிருந்து பகுதிகள் பெறபபட்டவையாகும். 

Dr.சே.சிவசண்முகராஜா.MD(s)

     – சிரேஸ்ட விரிவுரையாளர், சித்தமருத்துவப்பிரிவு, யாழ். பல்கலைக் கழகம்

திருமதி  சி.பத்மராணி, கலாசார உத்தியோகத்தர்.

மாருதப்புரவீகம், வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவை பண்பாட்டு மலர் 2021.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!