வேலைக் கையில் கொண்டுள்ளதால்வேலக்கை பிள்ளையாராலயம் என்ற பெயர் உருவானது. வைத்தியலிங்கம் சுவாமிநாதன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு மானிப்பாய் தெற்கில் வாழ்ந்த தம்பையா சிவக்கொழுந்து என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர் தனது இரண்டு பிள்ளைகளான அமரர்களான முத்துக்குமாரசுவாமி, இராஜேந்திரன் ஆகியோரிடம் ஆலயத்தினை நிர்வகிப்பதற்கான உரித்தினை எழுத்து மூலம் வழங்கி நிர்வாகம் தடையின்றி செயற்படுவதற்கு உதவியுள்ளார். தற்போது இவர்களின் பிள்ளைகளான திரு மு.சிவகுமாரன், திரு இ.வசந்தசேனன், திரு. இ.வசந்தகுமார், திரு.இ.சிவாஸ்கந்தா ஆகியோர் சிறந்த முறையில் ஆலயத்தினைப் பரிபாலித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைப் பூரணையை தேர்த் திருவிழாவாகக் கொண்டு பன்னிரண்டு நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.