முன்னூறு வருடங்கள் பழமையான கோவில் என இவ்வூர் மக்களால் குறிப்பிடப்படுகின்றது. நீண்டகாலமாக கட்டடங்கள் எதுவுமின்றி சிறிய கொட்டிலில் அமைந்திருந்த இவ் வாலயம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு 2016-09-16 ஆம் திகதி கும்பாபிஷேக சங்காபிஷேகமும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்டைதீவில் நடமாடிய சித்தர்களால் பூசிக்கப்பட்ட இவ்வாலயம் வேப்பந்திடல் முத்துமாரி அம்மனுக்கு அருகில் அமைந்திருப்பதும் இதன் சிறப்புக்களில் ஒன்றாகும்.