Saturday, October 5

ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோயில் – ஊரெழு

0

சுமார் 175 வருடங்களுக்கு மேல் தற்போதைய கோயிலின் மேற்கு வீதியில் வளர்ந்திருந்த புளியமரத்தடியில் கல்லினால் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு வழிபட்டு வந்தனர். 1834 ஆம் ஆண்டில் சிறு குடிசை அமைக்கப்பட்டது. இவ்வாலய பூசகராகவிருந்த வேதாரணியஐயர் காலத்தில் 1925 ஆம் ஆண்டு பெரும்சாந்தி குடமுழுக்கு விழா நடைபெற்றதாகவும் அறியமுடிகின்றது. இதன்பின்னர் கார்த்திகேசு ஐயரும், சிவஞான ஐயரும் நித்திய கருமங்களை நடத்திவந்தனர். பின்னர் இராமநாதன் வல்லிபுரமும், விஸ்வநாத வீரபாகுதேவரும் முகாமையாளராகவும், கணக்காளராகவும் பரிபாலித்து வந்துள்ளனர். 1944 ஆம் ஆண்டு முதன்முதலாக மகோற்சவம் ஆரம்பிக்கப் பட்டது. 1946 இல் சித்திரத்தேர் அடித்தளம் அமைக்கப்பட்டு 1977 இல் சண்டேஸ்வரருக்கும், விநாயகப்பெருமானுக்கும் தேர் உருவாக்கப்பட்டது. 1936-11-26 இல் இவ்வாலயம் அமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. பின்னர் 1966 இலும், 1985 இலும் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆலயத்திற்கான மணிமண்டபம் அமைப்பதற்காக 2008 இல் அத்திபாரமிடப்பட்டு 2010-01-17 இல் முழுமையாக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!