Saturday, September 14

வீரகத்தி விநாயகர் கோயில் திருநெல்வேலி தெற்கு பரமேஸ்வராச்சந்தி

0

திருநெல்வேலி தெற்கில் கே.கே.எஸ்வீதியில் பரமேஸ்வராச் சந்திக்கருகில் இக்கோயில் அமைந்துள்ளது. விநாயகர் மீது அளவு கடந்த பக்திகொண்ட பூநகரி தங்கச்சி என்பவர்கந்தர் தியாகர் என்பவரின் காணியில் 90 வருடங்களுக்கு முன் விநாயகப் பெருமானின்விக்கிரகம் வைத்து வழிபட்டு வந்ததாகவும்,பின்பு இ.தம்பையா என்பவர் மிகவும் ஆசாரத்துடனும் பக்தியுடனும் ஆலயத்தைப் பராமரித்துவந்ததாகவும் பின்பு மக்கள், இளைஞர் கழகம் ஒன்றைக் கூட்டி ஆலய வளர்ச்சிக்காக 1965 ஆம் ஆண்டு சைவ முன்னேற்றக்கழகம் ஒன்றை ஆரம்பித்து இதன்மூலம் ஆலய நித்தியபூசைகள் இடம்பெற வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீ வீரகத்தி விநாயகரை மூலமூர்த்தியாகவும் முருகன், சந்தான கோபாலர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலித்துக் கொண்டு அமைந்துள்ளார். விநாயகருக்கே சிறப்பாக உரியஅரசமரம் தலவிருட்சமாக விளங்குகிறது. தைப்பூசத் திருநாளில் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 15 நாட்கள் கொடியேற்றத்துடன் கூடிய மகோற்சவம் நடைபெறுகின்றன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!