பூர்வ தனுஷ்கோடி எனச் சிறப்பிக்கப்படும் இக்கோயிலானது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதாகும். இராமாயணத்துடன் தொடர்புபடுத்தியதாக இக் கோயிலின் வரலாறு கூறப்படுகிறது. இலங்கை வேந்தனை சங்காரம் செய்த இராமபிரான் வி;லை ஊன்றி வெளிப்பட்ட தீர்த்தத்தில் தீர்த்த மாடி வீரத்தைத் தந்த விநாயகனை வழிபட்ட தாகவும் இந்தியா வில் இராமேஸ்வரத்தைச் சுற்றி இராம தீர்த்தம், சீதா தீர்த்தம், இலட்சுமண தீர்த்தம் ஆகியவற்றில் தீர்த்தமாடிய பக்தர்கள் யாழ் . வில்லூன்றி புனித தீர்த்தத்திலும் தீர்த்தமாடுவார்களானால் விநாயகனின் அருளைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் இக்கோயிலோடு பிணைந்திருக்கும் வரலாறாகும். விபல வருடம் 1988.02.02ஆம் நாளிலிருந்து பேராசிரியர் குமாரவடிவேல் தனது சுயவிருப்பில் தனது தலைமையில் தர்ம பரிபாலன சபை ஒன்றை உருவாக்கி அன்றுமுதல் கோயில் நிர்வாகம் செயற்பட்டு வருகின்றது. 1959ஆம் ஆண்டிலிருந்து கொடியேற்றத்திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. வைகாசி 23ஆம் நாள் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் மஹோற்சவம் நடைபெற்று வருகின்றது;.