1710 ஆம் ஆண்டு பண்டாரபிள்ளை என்பவர் செங்காரபிள்ளை என்பவரது வயலைஉழுத போது கலப்பையின் கொழு கல்லில்பட்டு இரத்தம் பீறிட்டதாகவும் அதிலிருந்து வெளிப்பட்ட விநாயகர் சிலையை வைத்து கோவில் அமைக்கப்பட்டதாகவும் வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன.சிறுகுடிலில் இருந்த விநாயகப் பெருமானை 1790 ஆம் ஆண்டில் ஊர்மக்களது உதவியுடன் செங்காரப்பிள்ளை தோம்பு நிலம் வதிரன்புலோவிலும் இராசரத்தின முதலியார் தோம்புநிலம் வதிரன்புலோவிலும் பனையாள்வான் பிரிவிலும் கோவில் அமைக்கப்பட்டு இன்றைய நிலையினை எய்தியதாகவரலாற்றில் காணக் கூடியதாகவுள்ளது