Saturday, November 2

யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரி

0

1850 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த Monsig nor Orazio Bettachini என்ற மதகுருவினால் The Jaffna Catholic English Boys School என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் கல்வி நிர்வாகம் மத்திய பாடசாலை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்பட்ட காலத்தில் இக்குழுவினது சிபாரிசன் பேரில் அரசதொகுதி மானியம் 1860 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதனால் பாடசாலையின் பெயரானது துயககயெ டீழலள ளுநஅiயெசல எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1880 ஆம் ஆண்டளவில் ஆரம்பப்பாடசாலையையும் யாழ்ப்பாண ஆண்கள் செமினறியையும் இணைத்து முழுமையான உயர் கல்லூரியாக அங்கீகரிக்குமாறு பாடசாலை நிர்வாகத்தினால் அக்காலத்து மத்திய பாடசாலை ஆணைக்குழுவிற்குப் பதிலாக கல்விப்பணிப்பாளரது நிர்வாகத்தில் இயங்கிய பொதுக் கற்பித்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்தது. அவ் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதால் 1881ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் புனித பத்திரிசியார் கல்லூரி என அழைக்கப்படலாயிற்று.  மாணவர்களின் தேவைகளையறிந்து சுருக்கெழுத்து, நிலஅளவை,  பொறிமுறை வரைதல் போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தி கற்பித்தற் செயற்பாடுகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

                                                                            

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!