நல்லூர்க்கந்தன் ஆலய மேற்கு வீதியில் அமைந்துள்ள மேற்படி கோவில் 1873 இல் ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஆனி உத்தரட்டாதிநாளன்று அலங்காரத்திருவிழா ஆரம்ப மாகித் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. மாதாந்த சதுர்த்தி, விநாயகர் விரதம் ஆகிய தினங்களில் விஷேட திருவிழாக்கள் இடம்பெறும். இவ்வாலயம் அறங்காவலரினாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. நல்லூர்க்கந்தனின் வருடாந்த மகோற்சவ காலங்களில் வீதியில்ஷ பிரசங்கங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.