இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயர் பாடசாலை ஆகும். 1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் கருத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் மானிப்பாயைச் சேர்ந்த செல்வந்தர் வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் 1910, யுலை 4 ஆம் நாள் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதல் கட்டடமாக சங்கரப்பிள்ளை கட்டடம் அமைக்கப்பட்டது. இதற்காக அவர் இடத்தையும் பணத்தையும் கொடுத்தார். பின்பு 1923 ஆம் ஆண்டு வாகீசர் பிராத்தனை மண்டபமும் பின் 1955 இல் செல்லமுத்து கட்டடமும், வீரசிங்கம் கட்டடமும் அமைக்கப்பட்டன. 1965 இல் முத்துவேற்பிள்ளை கட்டடமும் இரசாயன, பௌதீக ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. அடுத்து 1970ல் பேராயிரவர் கட்டடமும் 1973 இல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டடமும் அமைக்கப்பட்டன. பின்பு 1980 இல் வீரசிங்கம் நிர்வாகக் கட்டடமும் 1982 இல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கட்டடமும் 1983 இல் 3 மாடி கட்டடமான சாரி மண்டபமும் அமைக்கப்பட்டன. தற்போது தேசியப் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஸ்தாபக தினத்தினை அடிப்படையாகக் கொண்டு இல்ல மெய்வல்லுநர்ப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம் என்பதுடன் இதனையொட்டியதாக மாபெரும் நாடக விழாவினையும் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.