நல்லையம்பதியிலே அரசவீதியிலே அரசமரங்களும் மருதமரங்களும் நிறைந்த இடத்திலே 1890ஆம் ஆண்டளவில் பக்தர் ஒருவர் வழிபடும் பொருட்டு ஓம்காரரூப விநாயகப் பெருமானிற்கு சிறியதோர் கோவில் அமைத்து வழிபட்டுவந்ததாகவும் பின்பு அவ்வூர்வ hசிகளும் சகோதரர்களுமாகிய திரு.ந.க.ராசா, திரு.சி.சி.நாகலிங்கம் ஆகியோர் விநாயகப்பெருமானிற்கு ஆகமவிதிப்படி அமைந்த ஆலயமாகவும் அமைத்தனர். 1920ஆம் ஆண்டளவில் மக்களின் அன்பளிப்புடனும் தங்கள் சொந்தச் செலவிலும் நிலபுலன்கள் கொள்வனவு செய்து கோயிலமைத்தனர். இராஜகோபுரம் அமைக்கப்பட்டு 2011இல் கும்பாபிN~கம் நடைபெற்றது. ஆரம்பத்தில் அலங்கார உற்சவங்களும், விஷேட உற்சவங்களும் சிறப்புற நடைபெற்று வரும் காலத்தில் 1935ஆம் ஆண்டு முதன் முறையாக கொடியேற்றப்பட்டு 10 தினங்கள் மகோற்சவம் நடைபெற ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் 1995ஆம் ஆண்டு புதிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டு வருடப்பிறப்பு தினமான 14.04.1995 ஆம் ஆண்டு விநாயகப்பெருமான் சித்திரத்தேரில் ஆரோகணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
