1870 ஆம் ஆண்டளவில் இவ்வாலயத்தின் மூலவரான சுயம்பு விநாயக மூர்த்தம் தோற்றம் பெற்றிருக்கலாம் எனக்கொள்ளப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் தற்போதுள்ள ஆலயத் திற்கு வடக்கே சுமார் முன்னூறு மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அந்தணர் குடியிருப்பைச் சேர்ந்த அந்தணப்பூசகர் ஒருவர் மருதில் தான்தோன்றீஸ் வரராகத்தோன்றிய விநாயகப்பெருமான் திருமேனி யில் அப்பகுதியில் விறகு சேகரித்த ஒருவரின் ஆயுதம்பட்ட மாத்திரத்தில் இரத்தம் சிந்தியதை யறிந்து பதறிவந்து சிறுகொட்டிலமைத்து தினமும் பூசித்து வந்தார். காலப்போக்கில் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியன அமைக்கப்பட்டன. இவ்வாலயத்தில் வித்துவசிரோன்மணி பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் ஆலயத்திற்கருகே எளிமையான குடிலில் ஆச்சிரமம் அமைத்து தமிழ் முனிவராகத் தவவாழ்க்கை மேற்கொண்டு வந்தவர். 1952, 1976 ஆகியஆண்டுகளில் கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீண்டும் 1989 இல்கீரிமலை நகுலேஸ்வரக் குருக்களின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாண்டிலிருந்து மகோற்சவமும் நடைபெற்று வரலாயின.ஆனி மாத அமாவாசைத் திதியை தீர்த்த நிர்ணய தினமாகக்கொண்டு பன்னிரண்டு தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.