போர்த்துக்கேயர்காலத்தில் அமைக்கப்பெற்றதாகக் கூறப்படும் இவ்வாலயம் வருடந்தோறும் சித்திரை புதுவருடதினத்தன்று இரதோற்சவ திருவிழா நடைபெறும் வகையில் பங்குனி மாதத்தில் கொடியேற்றத் திருவிழா வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். மேலும் அரச வர்த்தமான பிரசுராலயங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோயில் முழுமையான புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டு 2014 இல் கும்பாபிசேகம் நடத்தப்பட்டு 25 நாள்கள் மகோற்சவம் நடைபெறும் வகையில் திருவிழா மாற்றப்பட்டுள்ளது.