நுணாவில் மேற்கு மணங்குணாய் என்னும் பகுதியில் சைவச்சான்றோனும் அனுபூதிமானுமாகிய காளியர் என்னும் கதிரவேலு என்பவர் ஓர் பிள்ளையார் பக்தர். அந்நியர் ஆட்சிக்காலத்தில் தன் வீட்டில் பிள்ளையாரைக் குலதெய்வமாக ஒழித்து வழிபட்டு வந்த சூ ழ்நிலையில் சமய அனுட்டான நிலைகளில் இருந்த சட்டம் சிறிது தளர்த்தப்பட்ட போது தான் வணங்கிய பிள்ளையாரை வீட்டின் பின்புறத்தில் வைத்து வழிபடலானார். பின்னர் தனது பரந்துபட்ட காணியில் காணப்பட்ட இலுப்பை மரத்தின்கீழ் ஸ்தாபித்து வழிபாடுகளில் ஈடுபடலாயினர். தற்போது 1992 ஆம் ஆண்டிலிருந்து சித்திரை மாதத்தில் மகோற்சவம் நடைபெறும் வகையில் பத்து நாட்கள் திருவிழாவினை நடத்தி வருகின்றனர்.