கிட்டத்தட்ட போர்த்துக்கேயர் காலத்திற்கு முற்பட்ட காலமாக 300 வருடங்களிற்கு முன்னர்சிறு ஆலயமாகக் காணப்பட்டது. சுமபான் காரரும் தண்டயக்காரரும் கப்பல்களிற்கு இத் துறைமுகத்தினூடாக சென்றுவரும் பொழுது இவ்வாலயத்தினை வழிபட்டே சென்றன ர். இந்தியாவிலிருந்து நெல்லிற்குள் சமபான்காரர் மறைத்து சிறிய பிள்ளையார் ஒன்றினை கப்பல் மூலம் நெற்கொட்டுக்குள் வைத்து எடுத்துவந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இது கொட்டடி விநாயகர் எனப்பெயர் பெறலாயிற்று. வருடாந்த திருவிழா மாசி மாதம் அமாவாசையை தீர்த்தமாகக் கொண்டு 10தினங்கள்நடைபெறும். இங்கு தெற்ப உற்சவம்மகவும் சிறப்பானதொன்றாகும்.