Thursday, October 10

நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில் கோண்டாவில்

0

இக்கோயில் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பதனை சரியாகக் கூறமுடியா திருப்பினும் மிகவும் பழம்பெருமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக இவ்வாலயம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் திரு.நாகேந்திரர் என்னும் பெரியவராலே ஸ்தாபிக்கப்பட்டதாகவும் ஆதிகாலத்தில் இக்கோவிலைச்சூழ இருந்த நிலங்கள் அனைத்தும் தினையும், குரக்கனும், வள்ளிக் கிழங்கு வகைகளும் விளையும் நிலங்களாக இருந்ததாக வும் நாகேந்திரர் என்பவரது சகோதரி முறையான ஒருவர் இன்றைய கோயிலின் வடபால் வாழ்ந்துள்ளார். குறித்த மாதரசி விளைநிலங்களின் அருகிலே காணப்பட்ட ஒற்றை யடிப்பாதையால் நடந்துவரும் வேளைகளில் இன்றைய ஆதிமூலம் இருக்கும் இடத்தை அண்மித்ததும் மயக்க மடைவது வழக்கமாம். இதனை அறிந்த நாகேந்தி;ரர் அந்த இடத்திலே விநாயகமூர்த்தியை ஸ்தாபனம் பண்ணி சந்நிதி அமைத்து கொட்டிலும் அமைத்து வழிபடலானார். ஆரம்ப காலத்தில் விக்னேஸ்வரப் பெருமானுடைய ஒரு சப்பைக் கல்லை வைத்தே வழிபாடுகள் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. 2011 இல் வெளியான நெட்டிலைப்பாயான் எழில் என்ற மலரிலும் 1980 ஆம் ஆண்டு வெளியானகும்பாபிசேக மலரிலும் முரண்பாடாக வரலாறு ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஓலைக்கொட்டிலிலிருந்து சிறிது சிறிதாக வளர்ச்சி கண்ட இவ்வாலயம் கல்கொண்டு சாந்துக் கட்டடமாக சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். 1936 ஆம் ஆண்டு முதல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சித்திரைப் பௌர்ணமியன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்து நாட்கள் மகோற்சவம் நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!