Sunday, October 6

திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் நெடியகாடு

0

இக்கோயில் வல்வை பருத்தித்துறைச் சாலை யிலிருந்து முந்நூறுயார் கிழக்கே அமைந்துள்ளது. இதன் நீளம் 161 அடி, அகலம் 121 அடியாகும் இரண்டு பிரகாரங்களினையு டைய இக்கோயிலின் மேற்குத் திசையில் வெளிப்பிரகாரத்தில் திருக்குளம் அமைக்கப்பட்டிருப்பதோடு  இத் திருக்குளத்தின் மேற்கே பருத்தித்துறை பிரதான வீதியும் அமைந்துள்ளது. உட்பிரகாரத்தின் வடபகுதியில் நந்தவனமும், சிறிய தாமரைத் தடாகமொன்றும் அமைந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் பிள்ளையார் வைரவர் என்று அழைக்கப்படும் ஒரு சைவ ஆசாரசீலர் கோயிலின் தென்பகுதியில் அமைக்கப்பெற்றிருந்த மடத்தில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து வேதாரண்ணி யத்தில் கணபதி ஐயர் என்னும் பெயரையுடைய சைவக்குருக்களை அழைத்து வந்து பூசைகளை நடப்பித்து வந்தாரெனத் தெரிகின்றது. அவரது காலத்தின் பின் அவருடைய மகன் சிவஸ்ரீ தியாகர்  ஐயர் அவர்களால் நடத்தப்பட்டு வந்தன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!