1923 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்ட தமிழ் மொழியிலான ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை இதுவாகும்.இருபாலை கோண்டாவில் வீதியில் அமைந்திருக்கும் இக் கலாசாலையில் ஆசிரியர்கள் இரண்டு வருடங்கள் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்குகளுடன் கலைமலர் என்ற சஞ்சிகையினையும் ஆண்டு தோறும் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.