வைத்திய கலாநிதி பு.வல்லிபுரம் அவர்களால் 1911-04-03 ஆம் நாள் சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஐம்பது சிறுவர்களை அழைத்து வந்து செல்லப்பா என்பவரது வீட்டு விறாந்தையில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.இருந்த போதிலும் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி வேலுப்பிள்ளை என்பவர் பாடசாலைக்காக வழங்கிய பத்துப் பரப்புக் காணியில் உரும்பிராய் இந்துக் கலவன் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பமான இப்பாடசாலையானது வண் ஏ.பி பாடசாரலையாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.