Tuesday, January 21

அம்பலவாண வீரகத்தி விநாயகர் கோயில் – பொற்பதி, கொக்குவில்

0

1902 ஆம் ஆண்டளவில் மனித நடமாட்டமற்ற இப்பிரதேசத்தில் யாழ்ப்பாண அந்தணப்பெருமக்களுக்கு வேதம் கற்பிப்பதற்காக ஆச்சிரமம் அமைக்கும் நோக்கில் இந்நிலப்பரப்பினைத் துப்பரவு செய்தவேளை பூமியிலிருந்து விநாயகர் சிலையொன்று கிடைக்கப்பெற்றது. இவ்விடத்தில் முன்பு விநாயகராலயம் இருந்திருக்கலாம் எனக்கருதிய ஊர்மக்கள் அங்கு ஓர் சிறுகுடிலமைத்து இவ்விநாயகர் சிலையை வைத்தனர். காலப்போக்கில் ஆச்சிரமத்தில் இருந்த அந்தணப் பெருமக்களும் குருக்கள்மாரும் சேர்ந்து பெரிய ஆலயமாகக்கட்டியெழுப்பி மகா கும்பாபிஷேகத்தினை யும் நடத்தினார்கள். தில்லை அம்பலத்து ஆனந்தத் திருநடனம் புரியும் நடராஜர் மூர்த்தம் இங்கு நிறுவப்பட்டதனாலும் விநாயகப்பெருமான்உலோக கத்தியால் பூமியைத் தோண்டிக் கிடைக்கப் பெற்றவரானதாலும் பொற்பதி அம்பலவாண வீரகத்தி விநாயகர் கோவில் என இன்று பெயர்பெற்று விளங்கி வருகின்றது. ஆரம்பத்தில் 12 நாட்கள் அலங்காரத்திருவிழாநடைபெற்றதுடன், 1997 ஆம் ஆண்டிலிருந்து ஆவணி மாதத்து பூரணை தினத்தினை தீர்த்தோற்சவ நாளாகக் கொண்டு பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!