1892 ஆம் ஆண்டு அச்சுவேலி கோவில்பற்றில் Ni.வில்லியம் போதகர் தலைமையில் தேவாலயம் அமைக்கப்பட்டதோடு தேவாலய வளவில் தென்னிந்திய திருச்சபையின் அனுமதியுடன் 1892 ஆம் ஆண்டில் ஆண்கள்,பெண்கள் கல்விக்கான அமைப்புக்களை ஆலயச்சற்றாடலில் அரம்பத்தனர். இது அமெரிக்கன் தேவாலய மிஷனால் நிர்வகிக்கப்பட்ட ஆங்கிலப்பாடசாலையாக அமைந்திருந் தது. பின்னர் 1920 இல் கிறீஸ்தவக் கல்லூரியாக பின் 1960 இல் மகாவித்தியாலயம் என்ற பெயர்களில் விளங்கி 1971 இல் வேறுவேறாக இயங்கிய ஆரம்பப்பிரிவினையும்; ஆங்கிலப் பாடசாலையையும் ஒன்றாக இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் தற்பொழுது அச்சுவேலி மத்திய கல்லூரி என்ற பெயருடன் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.