Monday, May 12

கொக்குவில் இந்துக்கல்லூரி

0

1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொக்குவில் இந்துக்கல்லூரியானது கொக்குவில் காங்கேசன்துறை வீதியில் மூன்றாம் கட்டை என்னும் இடத்தில் அப்பாக்குட்டி என்பவரது வீட்டு முன்திண்ணையில் என்.செல்லப்பா மாஸ்டர்,தாவடியைச் சேர்ந்த சோமஸ்கந்தர் ஆகிய இருவரினாலும் குறிப்பிட்ட சில மாணவர்களுடன் ஆரம்கிக்கப்பட்டது. மாணவர் தொகை அதிகரிப்பினால் புதுக்கோயிலின் வடக்கு வீதிக்கு இடம்மாற்றப்பட்டு கொக்குவில் இந்துப்பாடசாலை என்ற பெயரில் இயங்கியது. 1916 இல் புதுக்கோயிலின் தெற்கு வீதிக்கு அருகே தலைமை ஆசிரியர் செல்லையா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணிக்குள் இடம்மாற்றம் பெற்று கொக்குவில் இந்து ஆங்கிலப் பாடசாலையாக இயங்கி 1941 இல் கொக்குவில் இந்துக்கல்லூரியாக வளர்ச்சியடைந்தது. ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை தனியாகவும், 6 ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த.உயர்தரப் பிரிவு வரை கல்வி போதித்து வருவதுடன் உயர் தரப்பிரிவில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளையுள்ளடக்கிய தேசிய பாடசாலையாகவும் ஆணகள்; பெண்களிருவரும் கல்வி பயிலும் யாழ்ப்பாணத்து முன்னணி பாடசாலைகளில்  ஒன்றாகவும் விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!