Saturday, September 14

அமெரிக்கன் இலங்கை மிஷன் தேவாலயம் – சாவகச்சேரி

0

அமெரிக்கன் மிஷன் தொண்டர்களால் 1834 இல் ஆரம்பிக்கப்பட்ட திருச்ச பை மக்களுக்கான வழிபாட்டிடமாகும். 1816 இல் இலங்கை மண்ணில் கால்பதித்த அமெரிக்க மி~னினுடைய முதலாவது தொண்டர் அணியினர் வலிகாமம் பகுதியிலே தங்கள் பணியை ஆரம்பித்ததோடு அங்கே அதனைப் பலப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டனர். அவ்வேளையில் உலகில் மிஷன் பணிக்கென்று புறப்பட்டமுதலாவது வைத்திய கலாநிதி ஜோன் ஸ்கார்ட் அவர்கள் குடும்பமாக பண்டத்தரிப்புப் பகுதியிலே பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்1834 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி தென்மராட்சிப் பகுதியிலே இறைபணியினை ஆரம்பிக்கும் முகமாகச் சாவகச்சேரியினைத் தெரிவு செய்து அங்கு ஒரு திருச்சபையைத் தாபித்தார். இதில் முதன் முதலாக திரு. எஸ். கே.ஜோன், டபிள்யூ. மொறிசன், சீஸ்மன், ஜோசப், மறாயா ஆகிய ஐவரும் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர். இவர்களில் ஜோனும் மொறீசனும் ஆலய உதவிக்காரர்களாகவும்விளங்கினார்கள். அருட்கலாநிதி ஜோன் ஸ்காடர் அவர்கள் வழிபாட்டினை ஆரம்பித்த ஆலயம் ஒல்லாந்தரால் கட்டப்பட்டு பராமரிப்பின்றிக் காணப்பட்டது. இது தற்போது ஆலயம் உள்ள இடத்தில் இல்லாமல் டிறிபேர்க் கல்லூரி வளாகத்திலேயே அமைந்திருந்தது. இது அமெரிக்கன் மி~ன் தொண்டர்களால் 1891 ஆம் ஆண்டில் பழுது பார்க்கப்பட்டு பாவனைக்குகந்ததாக மாற்றப்பட்டது. இதுவே இறுதியான திருத்தவேலையாகவும் அமைந்தது. 1932 ஆம் ஆண்டு இப்பழைய ஆலயமும் வீடும் நிபந்தனைகளுடன் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைக்குக் கையளிக்கப்பட்டன. 1933 ஆம் ஆண்டு வண. வி.எம்.ஜோன் சாவகச்சேரித் திருச்சபையின் குருவாக இருந்த காலத்தில் வண. எஸ்.ஆர்.கிக்கொக் புதிய ஆலயத்திற்கான அத்திபாரக்கல்லை நாட்டினார். 1947 ஆம் ஆண்டு வண. சபாபதி குலேந்திரன் குருவாக இருந்த காலத்தில் ஆலயத்தின் முன்புற வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு பிரதிஸ்டையுடன் வழிபாடுகளும் இப்புதிய ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டன. வண. ஏ.சீ. தம்பிராஜா சபைக் குருவாக விளங்கிய காலத்தில் 1951-05-21 இல் தற்போதைய ஆலயம் முழுமையாகக் கட்டப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது. 1950களில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குக்கையளிக்கப்பட்ட ஆலயம் இடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனுடைய கற்கள் சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட நவமணி படமாளிகையினைக் (பின்னர் தெய்வேந்திரா தியேட்டர்.) கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அப்போது பல ஆசிரியர்களும் திருச்சபை மக்களும் தேவாலயத்தை இடித்து படமாளிகை அமைப்பதா எனக் குமுறினார்கள். ஒன்பது பேர் இணைந்து அப்பட மாளிகையை அமைத்ததால் அதற்கு நவமணி படமாளிகையெனப் பெயர் வைக்கப்பட்டது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!