Saturday, May 18

மரியன்னை பேராலயம் யாழ்ப்பாணம்

0

இலங்கையின் வடபகுதியின் கத்தோலிக்கமையம்  என அழைக்கப்படக்கூடிய யாழ். ஆயர் இல்லத்திற்கு அருகாமையில் அமைந்து பலகத்தோலிக்க ஆலயங்கள் புடைசூழ யாழ். பிரதான வீதிக்கு சமீபமாக கதிற்றல் வீதியில் பிரமாண்டமான தோற்றத்துடன் அமைந்திருக்கும் ஆலயமே யாழ் மரியன்னை பேராலயமாகும். யாழ் ஆசனக்கோயில் என்றும், பெரிய கோவில் என்றும், புனித கொஞ்சேஞ்சி மாதா ஆலயமென்றும், மரியன்னை பேராலயம் என்றும் அழைக்கப்படுகின்ற யாழ் மறைமாவட்ட ஆயரின் வதிவிட ஆலயமும், தலைமைப்பீட வழிபாட்டுத்தலமும், பங்குத்தலங்கள் அனைத்தினதும் தாயாகவும ;விளங்குகின்ற புனித மரியன்னை பேராலயம் இலங்கையின் மிகப்பெரிய பேராலயமாகும்.35 சதுர அடி தள பரப்பைக்கொண்ட இவ்வாலயம் வரலாற்றில் நான்காவது ஆலயமாகும். ஆலயம் அமைந்துள்ள இடமானது சங்கிலி மன்னனுடைய காலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தமையை யாழ்ப்பாண வைபவ மாலையிலிருந்து அறியமுடிகின்றது. 1924 ஆம் ஆண்டு ஆயர் ஜே.ஏ.கியோமர் அ.ம.தி ஆண்டகை ஆயராகப் பொறுப்பேற்ற பொழுதுயாழ். பழைய பேராலயம் கட்டப்பட்டு 130 வருடங்கள் முழுமையடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜே.ஏ.கியோமர் அ.ம.தி ஆண்டகையால் வடிவமைப்புச் செய்யப்பட்டு 1939 இல் முழுக் கோவிலுக்குமான அத்திபாரம் இடப்பட்டு கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இரண்டாம் உலகமகாயுத்தம் காரணமாக வேலைகள் தடைப்பட்டன. பின்னர் 1972 இல் ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களால் மீண்டும் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1982-07-30 ஆம் நாள் கட்டடப்பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு நேர்ந்தளிப்பு விழா நடைபெற்றது. ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மாதம் பதினைந்தாம் திகதி மரியன்னையின் பெருவிழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!