Sunday, May 5

அமெரிக்கன் இலங்கை மிஷன் தேவாலயம் – வட்டுக்கோட்டை

0

1626ஆம் ஆண்டு போர்த்துக்கேயருடைய ஆட்சி இலங்கையில்  நிலவிய காலம் (1505 – 1656) கத்தோலிக்க இயேசுசபைக் குருக்களால் கட்டப்பட்டது. 31 வருடங்கள் இத்தேவாலயத்தையும், இதற்கு அருகில் கட்டப்பட்ட அழகிய பெரிய வீட்டையும் இயேசு சபைக் குருக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை இப்பகுதியில் அறிவிப்பதற்காகப் பயன்படுத்தி வந்தார்கள். 1627ஆம் ஆண்டு இவ்வாலயம் கட்டப்பட்டு ஒரு வருட காலத்துக்குள் இப்பகுதியில் 3800 கத்தோலிக்கர்கள் வாழ்ந்ததாகவும்,1641இல் 526 பிள்ளைகள் கத்தோலிக்க சமயத்தைப் படிக்க இவ்வாலயத்துக்கு வந்ததாகவும், இவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சமயம் சாரா பாடசாலையில் 1644 இல் 50 பிள்ளைகள் கல்வி கற்றனரெனவும் இயேசு சபையினரின் வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. 1657இல் ஒல்லாந்தர் ஆட்சி இலங்கையில் உதயமானபோது ஒல்லாந்த குருவான பிலிப்பல் தேயஸ் இவ்வாலயத்தினைப் பொறுப்பேற்று புரட்டஸ்தாந்து வழிபாடுகளை ஆரம்பித்தார்.இவ்வாலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வாழ்ந்த கத்தோலிக்க மக்களையும் இவ்வழிபாடுகளுக்கு வரும்படி இவர் அழைத்தார். பாடசாலையும் தொடர்ச்சியாக நடைபெற்றது. தேவாலயத்துக்கு அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ஒல்லாந்த குருமார் இப்பணிகளை மேற்கொண்டுவந்தனர். 1948 ஆங்கிலேயருடைய ஆட்சி நிலவும் வரை இவ்வாலயம் 152 வருடங்கள் ஒல்லாந்தருடைய புரட்டஸ்தாந்து பேராலயமாக விளங்கியது. 1817 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு ஒல்லாந்தரால் பாவிக்கப்பட்டுப் பாழடைந்து போன ஆலயத்தினையும் வீட்டையும் திருத்தி பிரித்தானிய ஆட்சியாளர் றொபேட் பிறவுண்றிக் இவற்றினை அமெரிக்கன்மி~ன் தொண்டர்களுக்கு கையளித்திருந்தார். 1817 தொடக்கம் 1948 வரை இவ்வாலயம் அமெரிக்க மின் தொண்டர்களுடைய நிர்வாகத்திலே நடைபெற்றது. இக்காலப் பகுதியிலேயே 1823ஆம் ஆண்டு இவர்கள் இலங்கையிலேயே புகழ்பூத்த “பற்றிக்கோட்டா செமினரி” என்னும் ஒரு உயர்கல்விக்கூடத்தை ஆரம்பித்தனர். தற்போது இது யாழ்ப்பாணக் கல்லூரி என்னும் பெயருடன் இயங்குகிறது. 1831ஆம் ஆண்டு வரை 5 சபைகளின் கூட்டாக வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, உடுவில், மானிப்பாய், தெல்லிப்பளை இணைந்து நிர்வகிக்கப்பட்ட சபைகள் தனித்தனி சபைகளாகப் பிரிக்கப்பட்டபோது 1831 இல் இவ்வாலயமும் வட்டுக்கோட்டை சபையாக மிளிர்ந்தது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!