Saturday, April 5

செல்லையா, கே.கே.வி

0

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் இசை நாடகங்களிலும் வரலாற்று நாடகங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர். இவரது படைப்புக்கள் மூலம் ஆற்றலுள்ள பல கலைஞர்கள் உருவாக்கப்பட்டனர். திரைப்படத் துறையில் ஈடுபாடுடையவராகவும், ஓவிய, சித்திர, நிழற்படக்கலைகளிலும் ஈடுபாடுடையவராகவும் திகழ்ந்தவர். தமிழ்ப்பாட விதானத்தில் இவர் வரைந்த ஓவியங்கள் வட இலங்கை தமிழ் நூற் பதிப்பக வெளியீடான பாலபோதினி நூல்களில் மு.மு.ஏ என்னும் பெயர்களில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வல்லுநர்களே காமுறும் அளவுக்கு தனித்துவத்துடன் விளங்கிய கே.கே.வி. செல்லையாவை பல்கலை வல்லுநர் எனப்பாராட்டி நின்றது கலையுலகம். இசைநாடகமான அல்லி அருச்சுனாவை சீன்களை நீக்கி இலகு உத்தியில் புதுமை புகுத்தி களங்களைக்காட்டியும் இசையாளர்களை மேடையில் இருந்தாளும் வீரிய முறைகளைக் கையாண்டுநெறியாள்கை செய்து அரங்கேற்றியவர். யாழ்ப்பாணத்தில் சபாஸ் புகைப்படக் கலையகம் என்றபெயரில் ஆரம்பித்து ஈழகேசரி சஞ்சிகையில் ஆவணமாக்கப்பட்டுள்ள அத்தனை புகைப்படங்களுக்குமான அச்சிடும் கோப்பைஅதாவது மெய்யுருவார்ப்பினைச்  செய்து ஃபுளொக் செய்யும்  கலையில் புதிய சாதனையை ஏற்படுத்தியவர். இவர் தனது புதல்வியான ரேலங்கி அவர்களை நடனத்துறையில் பயில வைத்தது மட்டுமல்லாமல், ஈழத்துத் தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க வைத்து கலைக்காக வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!