1895 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னுமிடத்தில் பிறந்தவர். சைவப் புலவரான இவர் மிகச்சிறந்த புராணபடன வித்தகராவார்.இசை கலந்த வடிவில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி சைவசமயத்தின் அறக்கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்றவர். கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலையினை ஆரம்பித்து தமிழ்க் கல்வியறிவினை ஊட்டிய பெருந்தகையாளன். 1928 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.