இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வரும் ஆவார். இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த மறு தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார். 1965, 1970 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டார். 1975 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவே இலங்கையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலையாகும்.