Friday, January 3

பாலசுப்பிரமணியம் வேலுப்பிள்ளை

0

(அச்சுப்பதிவு Letter Press)  அச்சுத் தொழிலில் மரமெய்யுருக்களின் (Block) பங்கும் அதன் தயாரிப்பில்; பாலா மாஸ்ரரின் வகிபாகமும்.

பாலா மாஸ்ரர் என அழைக்கப்படும்  கணித ஆசான் பாலசுப்பிரமணியம் அவர்கள் தெல்லிப்பளை துர்க்காபுரம் கடைச்சல் விற்பன்னர் வேலுப்பிள்ளை சரஸ்வதி பாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனாக  1951-05-22 ஆம் நாள் பிறந்தவர். தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் உயர் கல்வியினையும் பெற்று கேர்ப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கணித பாடத்திற்கான விசேட பயிற்சி பெற்று கணித ஆசானாகத் திகழ்ந்தவர். இவருடைய தந்தையார் கடைச்சல் தொழிலில் விற்பன்னராகத் திகழ்ந்தவர். மாட்டு வண்டிலின் குடத்தினை கடைந்தெடுப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தவர். மரக் கட்டையில் போர்த்தேங்காய் ஒன்றினை கடைந்து சாதித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்ய ஒன்றாகும். இவரின் இத்தொழில் நுட்பத்தின் சந்ததிக்கடத்தலை பாலா மாஸ்ரர் அவர்களிடமும் பாலா தொழிலக உரிமையாளர் பாலேந்திரனவர் களிடமும் காணலாம். பாலா மாஸ்ரவர்கள் அச்சுக் கோர்த்தலிற்குத் தேவையான மர மெய்யுருக்களைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

கணனி அச்சுப் பதிப்பு முறை எமது பிரதேசங்களில் அறிமுகமாகுமுன், பல அச்சகங்கள் (letter press) எழுத்துக் கோர்க்கும் முறையில் அச்சு வேலையை மேற்கொண்டன. இம்முறையில் எழுத்துகள், படங்கள் கோர்க்கப்பட்டுப் பின் இயந்திரத்தின் மூலம் பதிவு மேற்கொள்ளப்படும். இதற்குரிய எழுத்துகள் ஈயம், மரம் என்பவற்றில் ஆக்கக்கூடியதாக இருந்தது. அனேக படங்களும் நிழலுருவின்  முறையாலும் மரத்தாலும் ஆக்கப்பட்டன.

ஈயத்தில் தயாரிக்கப்பட வேண்டிய கோட்டுருக்களுக்கு (LineBlock) அதற்குரிய இரசாயனப் பொருள் முக்கியம். இப்பொருள் கிடைத்தற்குத் தடங்கல் ஏற்பட்ட காலத்தில் இத்தொழில் விருத்திக்கு மரமெய்யுருக்கள் ((Block) ) பெரிதும் உதவின. 

மரபுளொக்குகள் குறிப்பாக புத்தக முன்மட்டை, பற்பொடி, அப்பளம், சோப் போன்ற பல்வேறு வியாபாரப் பொருட்களின் லேபல்கள் தயாரிக்கவும், பாடசாலை புத்தகங்களின் படங்கள், பரீட்சை வினாத்தாள் படங்கள், போன்றவற்றை ஆக்கவும் அங்கு இக்கோட்டுரு (Line Block) மரபுளொக் பயன்படுத்தப்பட்டது.

மரமெய்யுருக்கள்  பல வர்ணம் கொண்டவையாகவும், தயாரிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக பின்வரும் விடயம் குறிப்பிட வேண்டியுள்ளது. இடப்பெயர்வின்போது பல்வேறு “டொபி” “இனிப்பு” வகைகளின் லேபல்கள் புதுப்புது வடிவில் தயாரித்த பெருமை இவருக்குண்டு.

பாடம் சம்பந்தமான மரமெய்யுருக்கள் (Block) தயாரிக்கும் போது தரப்பட்ட அசல் படத்தில் உள்ள அமைப்பு மாறாமல் முற்றாக சரியாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். இவர் ஓர் கணித ஆசிரியராக இருந்தமையால் இதில் எனக்கு சிரமம் ஏற்படவில்லை.

இம்முயற்சியில் இவர் அயராது ஈடுபட்டதுடன் இவருடைய உயர்வுக்கு உறுதுணையாக நின்றவர், இன்று யாழ் நகரில் முன்னணியில் இயங்கும் தயா அச்சக உரிமையாளர் திரு.தயாபரன் என்பதனை நன்றியுடன் கூறிக்கொள்கின்றார். அன்றைய ஸ்கந்தா பாடசாலை வணிகமன்ற பொறுப்பாசிரியர் ஆறு திருமுருகன் அவர்களால் “வணிக நாதம்” என்ற மலர் வெளியீட்டின் போது “பதிவு நுட்பம் காட்டிய பாலா” என கௌரவிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 1½ வருடங்களாக “உலகஉலா” என்னும் மாதாந்த சஞ்சிகைக்கு பல நுணுக்கமான மரமெய்யுருக்களைத் (Block)  தயாரித்தவர். இக்காலங்களில் பல அச்சகத்தினர் இவரை இரவு பகலாக ஊக்குவித்து செயற்பட வைத்தனர். இதில் முன் நின்று உழைத்த ஓவியர் செம்மலையான் (அமரர்) என்றும் நன்றிக்கும் அஞ்சலிக்கும் உரியவராவர் என நன்றியோடு அடக்கமாக நினைவு கூரும் இவரது பண்பு அளப்பெரியது. உலக உலா” ஆண்டுவிழாவில் கௌரவித்து பரிசில் பெற்றமை மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும். மரமெய்யுரு (Block) வேலை மன மகிழ்ச்சியையும், வருவாயையும் தரும்போது நாம் பூரண திருப்தி அடைந்த நிலையில் வாழ்ந்தார்கள்.

மரமெய்யுருக்கள் (Block) ) தயாரிக்கும் முறை

இதன் தயாரிப்பிற்குத் தேவையான வெவ்வேறு அளவிலான தட்டையான வளைவான உளிகளை தயாரித்துக்கொள்ள வேண்டும். இவ் உளிகள் அனைத்தும் மெல்லிய உருக்குத் தகட்டில் செய்யப்பட்டவையாகவும், மிகவும் “கூர்” கொண்டதாகவும் தயாரித்துக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு உளி மட்டில் செய்யப்பட வேண்டிவரும். மரமெய்யுருத் (Block) தயாரிக்க “யாவறணை” ‘சமண்டலை’ ஆகிய மரங்கள் உள்ளீடுகளாகப்  பாவிக்கப்படும். பலகையின் தடிப்பு கண்டிப்பாக 11/8  ஆக இருக்க வேண்டும் ஏனெனில் அச்சில் கோர்க்கும்   “1”m “2”அ எழுத்துகளின் உயரம் இதுவே ஆகும். நீள, அகலம், உருக்களுக்கு ஏற்ப மாறுபடும், மேற்படி அளவில்  பலகை வெட்டி அதன் ஒரு பக்கம் கடதாசி அரம் இட்டு ஒப்பரவாக்கப்பட வேண்டும்.

எந்த எழுத்தோ உருவமோ மரமெய்யுரு (டீடழஉம); எடுக்கும் போது அதன் கண்ணாடி விம்பம்தான் மரத்தில் கீறப்பட வேண்டும் உதாரணமாக “அ” என்ற எழுத்தை மரமெய்யுரு  அடிக்கும் போது ………….. வடிவில் மரத்தில் எழுதி பின் அதை வெட்டி எடுக்க வேண்டும். இதற்கு சுலபமான வழி எமக்கு வேண்டிய எழுத்தையோ உருவையோ காபன் பேப்பர் மேல் வைத்து அவ் உருவின் மேல் பென்சிலால் வரையும் போது உருவின் மறுபக்கம் அதன் எதிர்மறை வடிவம் பெறலாம். பின் இவ் வடிவை மரப்பலகையில் காபன் கொண்டு உருவை கவனமாக உளியால் தேவையான பகுதியை விட்டு மிகுதியை செதுக்கி சிறிது ஆழம் பதித்து வேண்டிய உருவைப் பெறலாம்.

உதாரணமாக  வடிவில் ஓர் அச்சு வேண்டுமெனில் எதிரே உள்ள படத்தி;ல் மை தீட்டப்பட்ட பகுதி போக மிகுதி 1/8 மட்டில் கோதி எடுக்கப்பட வேண்டும். அருகே உள்ள வடிவம் அச்சுப்பதிவுக்குப் பெறப்பட வேண்டுமெனின், அதன் மரமெய்யுரு (டீடழஉம); மரக்கட்டையில் பின்வருமாறு செதுக்கி எடுக்கப்பட வேண்டும்.

செய்த உரு உடனடியாக அச்சுப் பதிவு செய்து பார்க்க வேண்டுமெனின் மேற்படி உருவை மண்ணெண்னை விளக்கின் புகையில் பிடித்து பின் அதனை தாளில் பதித்து திருத்தம் செய்ய முடியும். மேற்படி மரக்கட்டையில் வரையப்பட்ட இன் விம்ப வடிவை அந்த எழுத்து வடிவை மட்டும் கோதி விட்டால் அச்சுப்பதிப்பு பின்வருமாறு அமையும்.

பலவர்ண மரமெய்யுரு (Block)ஆக்கத்தில் ஆக்கப்பட்ட மெய்யுருக்கள்  சரியாகப் பொருந்துதல் முக்கியம். இதனை சுநபளைவயவழைn பார்த்தல் என்பர்.

மேற்படி மூவர்ண அச்சுப்பதிவு செய்ய வேண்டுமெனில் 3 மரமெய்யுருக்கள்  அந்த வர்ணங்கள் வரும் இடங்களை ஒரே படத்தை சரியாக வைத்து ஒரே அளவு மரக்கட்டையில் பதிவு செய்து படத்தில் காட்டியாங்கு தேவையான பகுதி போக மிகுதியை வெட்டி கழிக்கவும் மூன்று புளொக்குகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே தாளில் வெவ்வேறு வர்ணம் கொண்டு பதியப்படும். ஒரே நேரத்தில் 3 வர்ணங்களும் பதிய முடியாது.

குறிப்பு – ஒன்றுக்கு மேல் இன்னோர் வர்ணம் பதியும் போது புதிய வர்ணம் தோன்றும்.

மரமெய்யுருக்களின்   முக்கிய பயன்பாடாக சினிமாப்பட சுவரொட்டி (Poster) எழுத்து ஆக்கத்தையும் குறிப்பிட வேண்டும். இதற்குரிய எழுத்துகள் 10’*8′ அளவு பலகையில் தனித்தனியாக ஆக்கப்பட்டு ஒழுங்கில் “bed” இல் அடுக்கப்பட்டு பின் அதன் மேல் மை பூசப்பட்டுப் பின் அதன்மேல் சுவரொட்டிக் கடதாசி (Poster Paper) வைத்து உருளைகள் உருண்டு அழுத்தி பிரதிகள் பெறப்படும்.

மரமெய்யுரு  ஆக்கத்தில் மிகவும் பொறுமையும் நுணுக்கமான செயற்திறனும்  மிகவும் முக்கியம். வெட்டி எடுக்கும் போது விடும் சிறு தவறும் பிரதிகளில் தெரியும். இச்சவாலை வென்று இச் செயற்பாட்டை முன்னெடுக்கும் போது ஆக்கங்கள்; உரிய கலைஞனைப் பிரகாசிக்க வைக்கும் என்பது உண்மை.  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வெளியீடான சமூக ஒளி சஞ்சிகைக்கு இவரால் தயாரித்து வழங்கப்பட்ட மெய்யுருக்களை இங்கு காணலாம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!