600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் அந்தண கு ருமார்களை வழிவழியாக அறங்காவலர்களாகக் கொண்டமைந்த சிறப்புடையதாக விளங்கி வருகின்றது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இக்கிராமத்து மக்களை பேதிநோய் வருத்தியதனால் இங்கு வாழ்ந்த அரியரிவட்டர் என்ற மந்திரவாதி இவ்விநாயகரை வழிபட்டு வசந்தன் கூத்தாடி பேதிநோயை இல்லாதொழித்ததான கர்ண பரம்பரைக் கதையும் இவ்வாலயத்தின் தொன்மை பற்றிப் பேசுகின்றது.ஒவ்வொரு வருடத்திலும் ஆடிப்பூரணை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்