குழந்தைகளின் பூசையை காலையில் ஏற்றும் உச்சிவேளையில் சுனையில் மறைந்தும் அருள்செய்யும் பெருமானின் புகழ் கிராமத்தில் பரவவே குளத்தில் மறைந்திருந்து அருள் பொழியும் பெருமானைத் தேடலாயினர்.குளத்தினை இறைத்து சேற்றினை அகற்றும் போது மண்வெட்டியானது விநாயகர் உருவில்பட்டது. இரத்தம் பீறிட்டது. தொடர்ந்து தேடியதன் பயனாக திருவுருவம் கிடைத்தது.அவ்விடத்தில் ஆலயமமைத்து வழிபட்டு இன்றைய நிலையினை அடைந்ததெனலாம். ஒவ்வொரு வருடமும்ஆவணி மாதத்துபூர்வ சஷ்டி தினத்தன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.