1932.12.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாடகக் கலைஞன். இவரால் எழுதப்பெற்று நடிக்கப்பட்ட நாடகங்கள் நாடளாவிய ரீதியில் பல தடவைகள் மேடையேற்றங் கண்டிருக்கின்றன. இவற்றில் அக்கரைப்பச்சை, மேலும் கீழும், கந்தன்கருணை, தாருகாவனம் போன்றன மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இதில் தாளலய நாடகமான மேலும் கீழும் யாழ். மாவட்டத்தில் 34 தடவைகள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த சொற்பொழிவாளரும் கவிஞனுமாவார். 1991-10-07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.