Thursday, May 2

விஸ்வநாதஐயர், இ.

0

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதும் 1944 ஆம் ஆண்டு முதல் 1990 வரையில் தனிப்பட்ட இசை ஆசிரியராக இல்லங்கள் தோறும், சங்கீத சபாக்கள் தோறும் பொதுப்பணி மன்றங்கள் தோறும் சுத்த கர்நாடக இசையைக் கற்பித்த நல்லாசிரியராக நினைவு கொள்ளப்படுபவர் என்பதுடன் இன்றும் நம் நாட்டின் மூத்த இசையாளர்களால் போற்றப்படுபவருமாவார்.நந்தனார்,சிவகவி போன்ற இசைச்சித்திரங்களை எழுதி அரங்கேற்றிப் பாராட்டுப் பெற்றவர். யாழ்ப்பாணம் இரசிகரஞ்சன சபாவின் அதிபராகவும் தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபையின் இசை ஆசிரியராகவும் முப்பது வருடங்கள் பணியாற்றிய ஐயரவர்களின் மாணவர்கள் இசை ஆசிரியர்களாகத் திகழ்வதைக் காணலாம். நாதஸ்வர மேதைகளான வீ.கே.பஞ்சமூர்த்தி,அளவெட்டி சிதம்பரநாதன் அமரர் என்.கே.பத்மநாதன் போன்றவர்கள் ஐயா அவர்களிடம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ததோடு, தியாகராச சுவாமிகளின் பஞ்சரத்தின கீர்த்தனைகளை ஸ்வரசாகித்யமாகக் கற்பித்த பெருமையுமுடையவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!