1920-07-26 ஆம் நாள் தெல்லிப்பளை – பன்னாலை என்னும் இடத்தில் பிறந்தவர். நாடக நடிகர், சொற்பொழிவாளர், இசைமணி என அழைக்கப்பட்டவர். அண்ணாமலை இசைக்கல்லூரியில் சங்கீத பூ~ணம் பட்டம் பெற்றவர். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இசை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.தெல்லிப்பளை கலாரஞ்சனா சபையில் நீண்ட காலம் தலைவராகப் பணியாற்றி பல இசை விழாக்களை முன்னின்று நடத்தியவர். 1998-12-31 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.