1919-09-21ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவற்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கை வானொலி யின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமையாற்றிய போதிலும் சிறுகதை, கவிதை, இலக்கியத் துறைகளில் உலகமறிந்த படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்தியவர். ஈழகேசரியில் நான்கு சிறுகதைகளையும், மறுமலர்ச்சியில் சாயை என்ற சிறுகதையையும் எழுதியவர். வடக்கு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மறுமலர்ச்சிக் கதைகள் என்ற நூலில் இவரது சாயை என்ற சிறுகதையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்க உறுப்பினராகப் பணியாற்றியவர்.இவரது மொழிபெயர்ப்புக் கவிதை நூலான சிலம்பொலி நூற்றாண்டில் இவரது கவித்துவத்தின் ஆழத்தினை வெளிப்படுத்தி நிற்பதனைக் காணமுடிகின்றது. 1994-02-17ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.