Monday, May 27

சேவியல் ஸ்தனிஸ்லாஸ் (தனிநாயகம் அடிகள்)

0

1913-08-02 ஆம் நாள் யாழ்.தீபகற்பம் நெடுந்தீவு என்னும் இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவேளை தனது மூதாதையரது பெயர் விபரத்தினை ஆராய்ந்து தனிநாயகம் என்ற பெயரை இணைத்து சேவியர் தனிநாயகம் எனத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், புனித பத்திரிசியார் கல்லூரியிலும் கற்று கேம்பிறிட்ஜ் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு புனித பேனாட் குருமடத்தில் குருத்துவப் பயிற்சி பெற்றவர். தொடர்ந்து உரோமாபுரியி லுள்ள ஊர் பான் குருத்துவ பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு இணைந்து எபிரேயம், கிரேக்கம், இத்தாலியம், இலத்தீன், ஸ்பான்,பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளுடன் ஐரோப்பிய தொல்பொருளியல் , கலை ஆகியவற்றினைக்கற்று தேமதுரத்தமிழோசை உலகெங்கும் ஒலிக்க வேண்டுமென்னும் உயரிய நோக்கினை மனதிருத்தி அதற்காகத் தன்வாழ்வையும் அர்ப்பணித்தவர். 1939-03-19 ஆம் நாள் குருவானவராக திருநிலைப் படுத்தப்பட்டவர். 1947 இல் தூத்துக்குடியில் தமிழ் இலக்கிய கழகத்தினை ஆரம்பித்து யப்பான், வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு தமிழ்த்தூது சென்று தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியவை தொடர்பில்   சொற்பொழி வாற்றும் வகையில் தமிழ்த்தூது சென்றவர். இச்சொற்பொழிவுகள் யாவையும் தமிழ்த்தூது என்றபெயரில் நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. இத்தூதின் காரணமாக அவர் ஆற்றிய உரைகளால் கவர்ந்த மேலைத்தேய அறிஞர்கள் தமிழ்த்தூது என நாமகரணஞ்சூட்டி அடிகளாரை பெருமைப்படுத் தினர். சென்னை, கொழும்பு ஆகிய இடங்களில் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பினை நிறுவி 1952 ஆம் ஆண்டு “வுயுஆஐடு ஊருடுவுருசுநு” என்ற ஆங்கிலமொழிச் சஞ்சிகையினை ஆரம்பித்து 1967வரை நடத்தியவர்.1961 இல் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியக்கலைத் துறைகளின் பேராசிரியராகவும், பீடாதிபதியாக வும் நியமனம் பெற்றார். இக்காலப் பகுதியில் அனைத்துலகத் தமிழாராய்ச்சிக்கழகம் என்ற அமைப்பினை நிறுவுவதற்கான கால்கோனை மலேசியாவின் அப்போதைய கல்வி அமைச்சரின் அநுசரணையோடு அவரது இல்லத்தில் கூடி ஆராய்ந்து பின்னர் புதுடில்லியில் நடைபெற்ற கீழைத்தேய அறிஞர்களின் மாநாட்டில் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் தலைமையில் 22 அறிஞர்கள் அமர்ந்திருந்த சபைதன்னில் அனைத்துலக தமிழாராய்ச்சி கழகம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது கழகத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றியவர். முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டினை துணைத்தலைவராக தலைமை தாங்கி 1966-04-16 ஆம் நாள் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தி முடித்தார், தொடர்ந்து இறக்கும் வரை நான்கு மாநாடுகளை நடத்தி முடித்தவர். தமிழ் மொழியுரிமைக்காக போராடிய போராளி என்பது மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் தமிழின் மொழியுரிமையை வென்றெடுத்தவர். பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இயற்கைக்கோட்பாடும் விளக்கமும், தமிழ்த்தூது, நம்மொழியுரிமைகள், ஒன்றே குலம் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழியற் துறையை அனைத்துலக அறிவுத்துறையாக்கி நாற்பதிற்கு மேற்பட்ட உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழ்ப்பண்பாட்டின் உயர்வு என்பன தொடர்பில் சொற்பொழிவுகளை ஆற்றிய தோடலல்லாமல் திராவிடவியல் கற்பிக்க வழியமைத்ததோடு உலகின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலும் அதிதிப் பேராசிரியராகப் பணியாற்றி 1980-09-01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!