Saturday, October 5

குணரத்தினம,; கந்தையா (பேராசிரியர்)

0

1934-04-30 ஆம் நாள் யாழ்ப்பாணம், ஏழாலையில் பிறந்தவர். தெல்லிப்பளை, யூனியன் கல்லூரியில் கல்வி பயின்று 1954 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று 1958 இல் இயற்பியலில் சிறப்புப் பிரிவில் இளமாணிப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 1960 முதல் 1963 வரை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயின்று டிப்புளோமா பட்டத்தையும், கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 1971 சனவரி முதல் செப்டம்பர் வரை டர்காம் பல்கலைக்கழகத்தின் முதல் நிலவியல் பிரிவில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1971 அக்டோபர் முதல் டிசம்பர் வரை குயீன் எலிசபெத் கல்லூரியின் இயற்பியல் துறையில் வருகை ஆய்வாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்ட போது யாழ்ப்பாண வளாகத்தின் இயற்பியல் பீடத்தின் நிறுவனத் தலைவராக ஏப்ரல் 1975 இல் இவர் நியமிக்கப்பட்டார். 1980 அக்டோபர் வரை அவர் அதன் தலைவராகப் பணியாற்றினார். 1981 சனவரி முதல் அக்டோபர் வரை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத்தின் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை திரும்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத் தலைவராக 1985 பெப்ரவரி வரை பணியாற்றினார். 1988 அக்டோபர் முதல் 1989 ஓகஸ்ட் வரை எடின்பரோ பல்கலைக்கழகத்தின் புவியியற்பியல் பீடத்தில் வருகை பேராசிரியராகவும், பின்னர் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் புவியறிவியல் பீடத்தில் சிறிதுகாலம் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். 1991 சனவரி முதல் 1993 நவம்பர் வரை பேராசிரியர் குணரத்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினியறிவியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார். பேராசிரியர் 1977 சனவரி முதல் 1978 மே வரையும், பின்னர் 1985 சனவரி முதல் 1988 மார்ச் வரையும் யாழ்ப்பாணப் பல்கலைக்ழகத்தின் அறிவியல் பீடத் தலைவராகப் பணியாற்றினார். 1994 ஏப்ரல் முதல் 1997 பெப்ரவரி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். 2000 ஏப்ரலில் பணியில் இருந்து இளைப்பாறினார். இறக்கும்வரை அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியரா கப் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் அரச வானியல் கழகத்தின் ஆய்வாளராகவும், 1999 இல் இயற்பியல் கழகத்தின் உறுப்பினராகவும் இணைந்தார். 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இப் பெரியார் 2015-09-9 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!