1925-10-08 ஆம் நாள் காரைநகர் தங்கோடை என்னுமிடத்தில் பிறந்தவர். கொழும்பு பலாமரச் சந்தியில் செல்லப்பா அன் சன்ஸ் என்ற வர்த்தக நாமமுடைய ஸ்தாபனத்தின் உரிமையாளராய் திகழ்ந்த இவர் 1950களில் யாழ்ப்பாணத்தில் கே.கே.எஸ். வீதியில் கணேசன் ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிலையத்தினை ஆரம்பித்து 1953 அளவில் வியாபாரத்தினைப் பதிவுசெய்து நடத்தி வரலானார். காலப்போக்கில் கணேசன் ஸ்ரோர்ஸ் பெருவிருட்சமாக மலர்ந்து 1985 இல் சிவகணேசன்ஸ் ரெக்ஸ்ரைல்ஸ்சை உருவாக்கினார். பலருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி நின்ற நிறுவனமாக மாறியது. இவரது திருமண வாழ்வின் பின்னர் இவரது பிள்ளைகளின் துணையோடு வியாபார நிறுவனத்தினை நடத்தி வந்தார். கணேசன் ஸ்ரோர்ஸ், சிவகணேசன்ஸ் ரெக்ஸ்ரைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தந்தை வழியில் மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை கனகசபை அவர்களது வழிநடத்தலும் மதிநுட்பமுமே என்று கூறினால் மிகையாகாது. தமது வருமானத்தில் ஒரு பகுதியினை சமூகசேவைகளுக்காக ஒதுக்கி செலவிட்டு வாழ்ந்தவர். சிறியன சிந்தியாத பெருமைசேர் சிந்தனையாளனாக வாழ்ந்த இவர் 1999-01-19 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
வணிக நிறுவனத்தினை ஆரம்பிக்கும் போது பத்திரிகை வாயிலாக அழைப்பு அனுப்பிய விளம்பரம்