Friday, May 3

செல்லத்துரை, சின்னத்தம்பி (வீரகேசரி)

0

1924 ஆம் ஆண்டு அச்சுவேலி நாவலம்பதி கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். சூடு, சுவை, சுவாரஸ் யம் என்பவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு பன்னெடுங்காலமாக தமிழ் மக்கள் மனங்களிலே வீரகேசரிப் பத்திரிகையில் அர்ப்பணிப்புடன் செய்திச்சேவை செய்து செய்தி மன்னன் என்று புகழப்பட்டவர்.சுதந்திரன் பத்திரிகையில் இணைந்து செயற்பட்ட இவர் ஈழகேசரி பத்திரிகையின் நிருபராக இளவரசு என்ற புனைபெயரில் பல ஆக்கங்களை வெளியிட் டார். சிறுகதை, நாவல், சினிமாத்துறை சேர்ந்த பலரையும் எமது நாட்டு வாசகர்களின் சுவைக்கேற்ப வர்ணிப்பதில் வல்லவராக விளங்கினார். ஈழகேசரியிலிருந்து வீரகேசரிக்கு செய்தி எழுதிய இவர் வீரகேசரியின் யாழ். நிருபராக தன்னை உயர்த்திக் கொண்டார்.அரசியல் சார்ந்த கட்சிப் பிரமுகர்கள் பலரது எண்ணங்களை சமூகத்திற்கு எடுத்துக்கூறி அவர்கள் முன்னிலை பெற உதவினார். தேர்தல் காலங்களில் அரசியல் பிரமுகர் களது வாக்குறுதிகளை தனது செய்தியின் மூலம் நிறைவேற்றப் பாடுபட்டார். பல இளம் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டு பலரது ஆக்கங்களையும் வீரகேசரியில் பிரசுரமாக வெளிவருவதற்கு வேண்டிய வழிப்படுத்தல் களை நல்கிய இவர் 1982 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!