Sunday, October 6

இரத்தினசிங்கம், குமாரவேலு, கந்தர்

0

1929.10.12 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள உடுப்பிட்டி இமையாணன் என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கைத்தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்தவர். ஆறு தசாப்தங்களுக்கு மேல் அத்துறையில் கோலோச்சிய ஒரு ஜாம்பவான். தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் அதற்கென தனியான ஓர் உரைநடை வடிவத்தை உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவர் அவர் என்று கூறுவது மிகச் சரியானதாகும். செய்திச் சொல்லாடல்களில் சுருக்கம், இறுக்கம் என்ற இரண்டையும் முழுஅளவில் புகுத்தியவர். நீட்டி முழக்காமல் சுருங்கக்கூறி விளங்க வைக்கும் தந்திரோபாயம் கைவரப்பெற்றவர். இரண்டு, மூன்று, நான்கு சொற்களுக்கு மேற்படாத வசனங்கள் மூலம் செய்திகளை அமைத்து அதன்மூலம் கருத்துச் செறிவுமிக்க – விடயதானம் அதிகம் கொண்ட -செய்திகளையும் பாமரர்களும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய உரைநடை வடிவத்தை சாமர்த்தியமாக நடைமுறைப்படுத்தியவர். இலகு தமிழ்ச்சொற்களை சரளமாகக் கையாண்டவர். ஈழத் தமிழ்ப் பத்திரிகைத்துறையின் சரித்திரத்தில் ஒரு குரு – சி~;ய பண்பியல்பு அவர் வழியாகத் தொடர்ந்தது. இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மிகப்பெரும் ஜாம்பவான் என்று போற்றப் படும் எஸ்.டி.சிவநாயகம் அவர்களுக்கு எப்போதுமே வலதுகரமாக – மிகவும் நம்பிக்கைக்குரிய சகாவாக-விளங்கியவர். சுதந்திரன் பத்திரிகை யின் ஆசிரியராகவும், வீரகேசரி பத்திரிகையின் இணை ஆசிரியராக வும், தினபதி, சிந்தாமணி, பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் பின்னர் சூடாமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக எஸ்.டி.சிவநாய கம் விளங்கிய காலங்களில் அவரது பிரதி விம்பம் கே.ஆரே என்று கருதும் அளவுக்கு என்றும் – எப்போதும். நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். அச்சில் வரும் செய்திகளை எழுதியவர் எஸ்.டி.எஸ்ஸா அல்லது கே.கே.ஆரா என்று அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றியவர் கள்கூட அடையாளம் காணமுடியாதளவிற்கு இருவரினதும் எழுத் தோட்டம், உரைநடை, சிந்தனைப்போக்கு, கருத்து வெளிப்பாடு சகலதும் ஒருங்கிணைந்திருக்கும். இவருடைய வழிப்படுத்தலில் இன்று பத்திரிகைத்துறையில் சாதனை படைத்துவரும் திருவாளர் வித்தியாதர னவர்கள் தன்னுடைய ஆசான் கே.ஆர் அவர்களே என்று கூறி பெருமை கொள்கின்றார். 2016-01-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!